Saturday, April 7, 2007

கான் ஆர்ட்டிஸ்ட்ஸ் – ஏமாற்றுபவனுக்கே உலகம் சொந்தம் ?

"$@%^&*!%^$ நம்பவெச்சி கழுத்த அறுத்துட்டான் மச்சி… " – பாஸ்கர் சொல்லி முடிக்கிறப்ப தான் நான் எண்ட்ரி குடுத்தேன்… யார சொல்ரான்னு செரியா கெஸ் பன்ன முடியல…அவன் யூஸ் பண்ண பேட் வோர்ட்ஸ எல்லாம் பாத்தா என்ன இருக்காதுன்னு ஒரு நம்பிக்கை.. (ஹீஹீ …)

இருந்தாலும் கேக்கறதுக்கு முன்னால கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாத்துகலாம்னு யோசிச்சாக்கா… கடஸியா அவன ஏமாத்துனது….அவன் வண்டிய உசார் பண்ணி இன்னோரு பிரெண்டுக்கு (இண்டர்வியுக்கு டைம் ஆயிடிச்சி மச்சி … நைட்டெல்லம் பிரிப்பேர் பண்ணினேன்…) குடுக்க போயி அந்த நாயி இன்னான்னா பிகர பிக்கப் பண்ணிக்கினு ஊரெல்லாம் சுத்திட்டு வந்து எனக்கே அல்வா குடுத்தது ஞாபகம் வந்தது …

ஓக்கே…அது நடந்து கொஞ்சம் நாலாச்சி, என்னான்னு தான் கேப்போம்னு கேட்டேன் …

"டேய், இன்னாடா ஆச்சி?", நான்

"ஆமாண்டா ஏமாந்தத எத்தினிவாட்டி சொல்றது?", பாஸ்கர்

"சொல்டா டேய்…", மூஞ்ச ரொம்ப சோகமா வெச்சுகினு கேட்டேன்.

"ஒன்னும் இல்ல மச்சி", இது பாஸ்கர் கிட்ட உச்சு கொட்டி கதய ஏற்கனவே புல்லா கறந்துட்ட சரவணன். அவன் ஸ்டயில்ல சொல்ல ஆரம்பிச்சான் …

"இவனும் தொரயும் பைக்ல போயிருக்கானுங்கோ. நம்ம நூரடி ரோட்டு மொனயில எதோ ஒரு பெருசு பாவமா நின்னுகினு கைய காமிச்சு இருக்குது. ஒடனே நம்ம பசங்களும் பாவப்பட்டு நின்னு இன்னான்னு கேட்டுகிறானுங்கோ … பெருசு ஓன்னு கதரி அழுதுகீது… இன்னான்னு விசாரிக்கலாம்னு பாத்தா பெருசுக்கு தமிழ் தெரியாது போல …நம்ம இந்தி பண்டிட் (பண்டிடெல்லாம் ஒன்னும் இல்லீங்க. நம்ம கோஷ்டில கொஞ்சூண்டு இந்தி தெரிஞ்சவன்) தொரதான் டிரான்ஸ்லேட் பன்னி இருக்கான் … "

"பெருசுக்கு சொந்த ஊர் ராஜஸ்தானாம். தரயில போடற கார்பெட் இல்ல? அதெல்ல்லாம் செஞ்சி இங்க எக்ஸிபிஷனுக்கு விக்க வந்து இருக்குது …எக்ஸிபிஷன் தீ புடிச்சி எரிஞ்சி போனதுல சரக்கெல்லாம் அவுட்டாம். ஒரு ட்ரை சைக்கில்ல நாலு கார்ப்பெட் வெச்சிக்கினு இருந்து இருக்குது. கடசியா மிஞ்சினது இதுதான். ஊருக்கு போவ கூட காசு இல்ல இதுல ஒரு கார்ப்பெட் இருவது ஆயிரம் போவும். இதெல்லாம் பெரிய அரண்மனயில போடற குவாலிட்டி. இதுல ஒன்னாவது எடுத்துகினு பாதி காசாவது தந்தா ஊருக்கு போவுறதுக்காவது காசு கெடைக்கும்னு பெருசு ரொம்ப பிலடப் குடுத்து இருக்குது."

"நம்மாளுங்களும் பாவப்பட்டு இருக்கானுங்கோ. அப்பிடியே சூப்ப்ப்புரா பேரம் பேசி (?%#$%) ஒன்னு அஞ்சாயிரமுன்னு ஆளுக்கு ஒன்னு வாங்கிகின்னு வந்து இருக்கானுங்கோ …", மொகத்துல நமுட்டு சிரிப்பு.

"மச்சி… அவுனுக்குதான் இந்தி தெரியும் பாவப்பட்டு வாங்குனான், ஒன்னுமே புரியாத நீ இன்னாத்துக்கு வாங்குன? சைடுல வித்து துட்டு பாக்லான்னுதான? சும்மா இருக்காம பாஸ்கர போட்டு சீண்டுனான்.

"^%#@# ச்சே…உங்கிட்ட சொன்னன் பாரு …", பாஸ்கர் ரொம்ப சூடாயி சரவணன பாத்து பாய, நான் உள்ள பூந்து சமாதானம் பண்ண வேண்டுயதா போச்சு.
அந்த கார்பெட் ஒன்னு ஐனூரு கூட போவாது. பாஸ்கர பாத்து பாவபடுறதா இல்ல கோவ படுறதா?

ஏமாற்றுவது ஒரு கலை. ஏமாறுவது?

பெருசு போன்ற திறமையான ஆளுங்க உலகம் பூரா பல லெவல்ல இருக்காங்க. பல பேருக்கு தொழிலே ஏமாத்தி தின்னுறது தான்.

நம்ம இவுங்க மேல வெக்கிற நம்பிக்கை தான் இவங்களோட முதலீடு. அந்த நம்பிக்கய சம்பாதிக்க நம்ம வீக்னெஸ பக்காவா கண்டுபுடிச்சி நெத்தியடி அடிப்பாங்க.

இப்படி எதோ ஒரு விதத்துல எமாந்தவங்க பல பேர நம்ம எல்லாருக்கும் தெரியும்.

சமீபத்துல நண்பர் ஒருத்தர் நைஜீரியாவுல இருக்குற சிலபேர நம்பி பல ஆயிறம் டாலர்கள இழந்துட்டு நின்னப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடிச்சி. மனைவிய விட்டு பிரிஞ்சி ரொம்ப மனசு உடஞ்சி போயிருந்த அவுருக்கு பெண் உருவத்துல (இன்டெர்னெட் மூலம்) லவ்வுன்ற பேர்ல நல்லா அல்வா குடுத்து இருக்கானுங்கோ …

கொஞ்சம் கொஞ்சமா காசு வாங்கி பதினஞ்சாயிறம் போனப்புறம் தான் நண்பர் நம்மகிட்ட விசயத்த சொன்னாரு. நண்பர் ஒன்னும் லேசான ஆளு இல்ல. பல விஷயங்கள ஆழமா பேச கூடியவர். தன்னொடய கருத்த அடிச்சுபேசக்கூடியவர். பல தடவ அவருடய ஆழமான அறிவ பாத்து ஆச்சரியப்பட்டு இருக்கேன்.

இது போல நல்லா படிச்சி பல‌ வருஷம் அமெரிக்கவுல இருக்குற ஒருத்தர் கூட ஏமாற்றப்போ பாஸ்கரெல்லாம் பிஸ்கோத்துன்னு பட்டுச்சி …

இது போல ஏமாத்துறவங்கள பத்தி அண்ணன் கூகிள் கிட்ட கேட்டப்போ தெரிஞ்ச விசயங்க கீழ...

ஒரு கான் ஆர்டிஸ்ட்டொட‌ பொதுவான‌ குண‌ங்க‌ள்...

1. இளிச்ச‌வாய‌னை அடையாள‌ம் கண்டுக‌ர‌து.
2. இளிச்ச‌வாயன் ந‌ம்பிக்கையை ச‌ம்பாதிப்ப‌து.
3. இளிச்ச‌வாயன் கிட்ட‌ இருந்து எவ்வ‌ள‌வோ உருவ‌ முடியும்னு கணக்கு பன்னுரது.
4. சூப்பரா பில்டப் குடுத்து நம்ம இ.வாகிட்டயிருந்து ப‌ண‌த்த‌ உருவுர‌து.
5. சைல‌ன்ட்டா எஸ்கேப் அவ‌ர‌து.

"வ‌ண‌க்க‌ன்னே... ந‌ம‌க்கு மதுர பக்கம். வ‌ந்த‌ எட‌த்துல‌ வ‌ச்சிருந்த‌ பைய‌ யாரோ காலவாடிட்டாய்ங்க‌. வ‌ண்டி செல‌வுக்கு... ", இப்புடி தெனத்துக்கும் தினுசு தினுசா திரியிரவங்க...

"நரம்பு தளர்ச்சி ஆண்மை கோளாறு...", இப்புடி ப‌த்திரிக்க‌யில‌ விள‌ம்ப‌ர‌ம் குடுத்து அல்வா விக்கிர‌வுங்க...

இஷ்ட‌த்துக்கு உதார் உட்டு ப‌ண‌ம் க‌ற‌க்க‌ற‌ ஜோசிய‌ கார‌ங்க‌...

நாடி ஜோசிய‌ம்ன்ற‌ பேருல ரோட்டுக்கு ரோடு க‌ட‌ வெச்சு ஏமாத்துர‌வ‌ங்க‌...(என்னுடய கணிப்புல இது தான் பெஸ்ட் கான்... ந‌ம்ம‌ வாயில இருந்தே மேட்ட‌ற‌ க‌ற‌ந்து ந‌ம்ம காதுல‌யே பூ சுத்துற‌து...)

போலி சாமியாருங்க...

போலி பைனான்ஸ்காரைங்க‌...

"எங்க‌ நைனா எர‌னூரு கோடிய‌ பேங்க்ல‌ வெச்சுட்டு செத்து பூட்டாரு...அத‌ எடுத்து குடுக்குற‌துக்கு உங்க‌ உத‌வி தேவை. இதுக்கு ச‌ன்மானம் உங்குளுக்கு இருவ‌து கோடி..." ஈமெயில்ல அல்‌வா குடுக்குற‌வ‌னுங்க‌...


இப்ப‌டி ந‌ம்மள‌ ந‌ம்பி பெரிய‌ கூட்ட‌மே பொழ‌ச்சி கிட‌க்கு...உசாரா இருங்க‌ ம‌க்கா...


நீங்க யார்கிட்டயாவது அல்வா வாங்கன‌துன்டா?


~ மாற‌ன்

Thursday, April 5, 2007

நானும் மாட்டிக்கிட்டேன்

"இன்னாப்பா இப்பத்தான் அவனுங்கோ எல்லாம் முடிச்சானுவோ, இவன் ஆரம்பிச்சிட்டாம்பா", யாரோ கொசுக்கடி தாங்காம அடிக்க போர கமென்ட்டு இப்பவே காதுல கேக்குது. அதுக்கெல்லாம் மசிஞ்சா எப்போத்தான் நாங்க எல்லாம் விய‌ர்டு (இலக்கியம்?) படைக்கிறதாம்?

சில‌ விஷ‌ய‌ங்க‌ள‌ நம்மளாள கண்டிப்பா புரிஞ்சிக்க‌ முடியும். இருந்தாலும் அதுங்க‌ விய‌ர்டுன்ற‌‌த‌ ம‌றுக்க‌ முடியாது (ஹிஹி...விய‌ர்டுங்களை விய‌ர்டுங்களுக்குத்தான புரியும் ?)

த‌யிர் சாத‌த்துல‌ ர‌சம் கல‌ந்து சாப்புடரது (சர்வேசன்), பிஷ் ப்ரை வெச்சு சாப்புடரது (நெல்லை சிவா), சாம்பார் சாத‌த்துல‌ ப‌ஞ்சாமிர்த‌ம் கல‌ந்து சாப்புடரது (ஹிஹி ஜஸ்ட் கிடிங்) இது போல‌...

ந‌ம்ம‌ வியர்டு லிஸ்ட் கீழே...இது எல்லாமே நாந்தான்னு கிடையாது...பெரும்பாலும் ஃப்ரென்ட்ஸ், சில‌து நான் (இமேஜ மெயின்டெய்ன் பன்னுவம்ல...)

"எக்ஸாம்ல பாஸ் ஆவலன்னா என்னா நடக்கும்ன்னு எனுக்கே தெரியாது..." அப்டின்னு சாமியயே மிர‌ட்டுன‌து...

பஸ்சுல இட‌ம் காலியா இருந்தாக்கூட‌ புட் போடுல‌ தான் நிப்பேன்னு நக்கல் ப‌ன்ன‌து... (கண்டக்டர் கிட்ட ஆப்பு வாங்கினது பொது வாழ்க்கயில சகஜங்க‌‌றதால அத உட்டுடலாம்.)

ஜூர‌ம் அடிக்கிற‌ப்போ ஐஸ்க்ரீம் சாப்பிட்டது...

உள் ப‌னியனை எப்பவுமே திருப்பி போடுற‌‌‌து...

"ப‌யித்திய‌க்கார ஆஸ்ப‌த்திரியில‌ இருக்கிற‌ ப‌யித்திய‌த்துக்கு வைத்திய‌ம் பாக்க‌ர‌ அந்த‌ ப‌யித்திய‌க்கார‌ வைத்திய‌ருக்கு ப‌யித்திய‌ம் புடிச்சா.....", அப்புடின்னு வ‌ர‌ விசு ட‌ய‌லாக்க‌ ஊர்ல‌ இருக்கிற‌ எல்லார்கிட்ட‌யும் ப‌யித்திய‌ம் போல‌ ஒப்பிச்ச‌து...

ஓனான் புடிச்சி அத‌ பீடி புடிக்க‌ வெச்ச‌து ("ஓனான் புடிச்ச‌து தான் நான். ஆன‌ அது வாயில‌ பீடி வெச்ச‌து பாஸ்கர்தாம்ப்பா...", நைனாகிட்ட உதை வாங்க‌ற‌ப்போ சொன்ன‌த‌யே இங்க‌ ரிப்பீட் செய்யரேன்)

அப்புடின்னு லிஸ்ட் எசகுபிசகாத்தான் போகுது...

ஆனா இதெல்லாம் ஒரு மேட்டரா? ந‌ம்ப‌ பள்ளிக்கூட‌ வாத்தியாருங்கோ பேசின‌ இங்கிலீஷ் அன்னிக்கி என்னமோ ரொம்ப வியர்டாத்தான் இருந்திச்சி...இன்னிக்கி நெனெச்சா ஒரே சிரிப்பாத்தான் இருக்கு...


பி.டி. வாத்தியாரு ஒரு தடவ எங்கள‌ பாத்து "Why are you rotating the ground?" ~ அப்பிடின்னது என்னான்னு புரியாம ஙே ன்னு விழிச்சது ஞாபகம் இருக்கு...கொஞ்சம் யோசிச்சா அவர் என்ன சொல்ல வந்தாருங்கற‌த ஈஸியா புடிச்சிற‌லாம்...புடிங்க புடிங்க...

சயின்ஸ் வாத்தி, "Open the Window. Let the atmosphere come in", அப்டின்னப்போ சில பசங்க சிரிச்சேப்புட்டாய்ய்ங்க...


சிறு வயசுல ஒரு அங்கிலோ இந்தியன் ஆன்ட்டிகிட்ட டியூஷன் போனோம். ஆன்ட்டி சும்மா இங்கிலீஷும் இல்லாம தமிழும் இல்லாம‌ ஒரு ரேஞ்சில பின்னுவாங்க‌. சத்திமா இன்னா பேசறாங்கன்னே புரியாது. இன்னாடா நைனா இப்புடி மாட்டிவுட்டுட்டாருன்னு பாஸ்கர் கிட்ட கேட்டா அவன் "ஆமான்டா உன்னோட உட்டாரா? எங்கப்பா கிட்ட சொல்லி என்னியுமில்ல சேத்து உட்டுட்டாரு?", க‌டுப்புல‌ என்ன பாத்து மொரச்சான்.

மொட்ட‌ மாடியில‌ டியூஷ‌ன். ஒரு நாள் அவுங்க வீட்டுக்குள்ள நுழைய போரோம், ஆன்ட்டி மாடில இருந்து எங்க‌ள‌ பாத்து கைய‌ காட்டி கத்துராங்க...

"Deksa fell in the kawa man" , ஒன்னுமே புரில. நால்ஞ்சு தடவ அவங்க கத்துனதுக்கு அப்புறம் அவங்க கைய காமிச்ச எடத்துல பாத்தா, அங்க இருந்த சாக்கடையில அவங்க வீட்டு பாத்திரம் ஒன்னு விழுந்துட்டு இருக்கு. அதத்தான் அப்பிடி சொல்லியிருக்கங்க‌ :)
(புரியாதவங்களுக்கு deksa = பாத்திரம், kawa=சாக்கடை)

ஒரு நாள் விளைய‌டிகிட்டிருந்த‌ ப‌ச‌ங்க‌ள‌ பாத்து ஆன்ட்டி "Dei don't play in the veyyillll go and play in the puliyaa maraththu nezil" அப்பின்னு சொன்ன‌தா கேள்வி. புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்‌...

இதோட ஐ.யேம் எஸ்கேப்...

ந‌ம்மள‌‌ போட்டுகுடுத்த‌ புண்ணிய‌வான் நெல்லை சிவாவுக்கு ஸ்பெஷ‌ல் தேங்ஸ்...

~மாற‌ன்

Wednesday, February 21, 2007

சினிமா இசை ‍‍- சுட்டா ஹிட்டு வ‌ரும்...துட்டும் வ‌ரும்...

கொட்டோ கொட்டுன்னு கொட்டற கற்பனை வளத்துக்கு சாப்புடுவீர்..(விடை கீழே...)

சில வருஷங்களுக்கு முன்னால‌ என்னோட‌ ஃபேவரிட் இசையமைப்பளரின் இன்னிசை இரவு சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்துல நடந்தது... எங்க‌ கஸ்டமர் கம்பெனி ஒன்னுதான் அந்த நிகழ்சிக்கு பெரிய ஸ்பான்சர்ன்றதால நமக்கும் ஓசில டிக்கெட் கெடச்சிச்சி...


எனக்கு தெரிஞ்சி ந‌ம்ம இசையமைப்பளர் இது போல நிகழ்சி நடத்துனது (சென்னையில) ரொம்ப அபூர்வம்தான்.

நாங்க ஏற்கனவே டிக்கெட் வச்சுருந்ததால கொஞ்ச‌ம் மெதுவாத்தான் போனோம். நம்ம ஆபீஸ் நண்பர் சுதாகர் எப்பவும் போல கடசி நேரத்துல கல்தா குடுக்க, டிக்கெட்ட யாருக்கவது விக்கலாம்னு வெளியில நின்னோம். டிக்கெட்ட கையில வெச்சது தான் தெரியும் ஏகப்பட்ட கூட்டம் கூடிடுச்சு...என்னாடா இது ஒரு டிக்கெட்ட‌ விக்க போயி ஃப்ளாக்ல டிக்கெட் விக்கரான்னு எவன்னா (எங்க மொதலாளி கூட‌ இன்னும் வரல. அவரு பாத்தா ரொம்ப கேவலம்) புடிச்சிர‌ போரான்னு கொஞ்சம் பயந்து கூட போய்டோம்.

ச‌ரி வ‌ந்த‌ முத‌ல் ஆளுக்கு டிக்கெட்ட குடுத்தோம். வித்தாச்சி, எஸ்கேப் ஆளாம்னு பாத்தா, கொஞ்சம் குண்டா இருந்த ஒருத்த‌ர் விடாம "சார் ஒரே ஒரு டிக்கெட் கெடெக்குமா?" ன்னு கேட்டாரு. அவ‌ரோட‌ முகம் இன்னும் ஞாப‌க‌ம் இருக்கு...அவ்வ‌ளோ ஆவ‌ல், ஆசை, முகத்துல டிக்கெட் கெட‌க்க‌லன்னு அப்படி‌ ஒரு சோக‌ம்.

"இல்ல‌ சார்", நான்.

"ஆயிர‌ம் ரூபா த‌ரேன் சார்", அவ‌ர்.

என‌க்கு கொஞ்சமா தல‌ சுத்துச்சி... நாங்க வெச்சி இருந்த டிக்கெட் நூறு ரூபாத்தான். நூறு ரூபாக்குதான் வித்தோம். அதுவே ஒரு லாபம் தான். ஓசில வந்த டிக்கெட் ஆச்சே அதுக்கு மேல விக்கனும்னு ஒரு ஐடியா வரல.

ப‌க்க‌துல‌ இருந்த என் ஃப்ரெண்டு பாஸ்கர்தான் ரொம்ப அப்செட் ஆயிட்டான். ஆயிர‌ம் ரூபாய்க்கு எத்த‌ன நாள் பீர் அடிக்கலாம்னு க‌ண‌க்கு போட்டு அவ‌ன் சோக‌த்த‌ அவ‌னே அதிக‌மாக்கிக்கினு இருந்தான்... நம்ம‌ கிட்ட‌ டிக்கெட் வாங்கின‌வ‌ன் எங்க‌யாவ‌து இருக்கானான்னு சுத்தி சுத்தி பாக்க‌றான்...

"சார் ஒன்னு தான் இருந்துது. இப்போ தான் ஒருத்த‌ரு வாங்கினு போனாரு..சாரி சார்..", நான்.

ரொம்ப‌ சோக‌மா அவ‌ரு ந‌க‌ந்து போர‌த‌ பாத்துன்னே இருந்தேன்...

ஒரு உண்மை புரிஞ்சிச்சி... ந‌ம்ம‌ விட மிகப் பெரிய‌ ர‌சிக‌ன்லாம் இருக்காம்பா...

ஓசி டிக்கெட்ல (ஙே) இருந்து ஆயிரம் ரூபா குடுத்து டிக்கெட் வாங்கர வரைக்கும் பல ரேஞ்ல ரசிகர்கள்...

நீங்க‌ அப்ப‌டி ஒரு ர‌சிக‌ரா இருந்தா இங்க‌யே நிறுத்திக்கோங்க‌... கீழ‌ இருக்க‌ற‌த‌ ப‌டிச்சிட்டு ரொம்ப‌ அப்செட் ஆனா நான் பொறுப்பு இல்லீங்கோ....


சாப்புடுவீர் ஃபாரின் அல்வா...


காப்பியடிச்ச மியூசிக்ன்னு சொன்னா எல்லாரும் கரெக்டா தேவான்னு சொல்லுவீங்கன்னு நல்லா தெரியும்...அந்த‌ கால‌ அளாயிருந்தா வேதான்னு (??? என்ன‌ ஒரு பேர் பொருத்த‌ம்...) சொல்லுவீங்க‌...இவிங்க‌ ரென்டு பேருக்கும் ந‌டுவுல இருந்து வந்தவரா இருந்தா ச‌ங்க‌ர் க‌ணேஷ்ன்னு சொல்லுவீங்க‌...

ஆனா, அன்றையிலிருந்து இன்னய வரை மிகவும் புகழ் பெற்ற இசையமைப்பள‌ர்கள் கூட கொஞ்சம் கடன் வாங்கித்தான் நம்மள எல்லாம் பரவச படுத்தியிருக்காங்கன்னு சொன்னா அடிக்க வருவீங்களோ?

நான் சொல்றத நம்பவாணாம்...கீழ ஒரு ரெம்ப சின்ன லிஸ்ட்...இதுல உங்க ஃபேவரைட் இருந்தா என்ன வய்யாதீங்க...


எம்எஸ்வி
அடிச்ச‌து இது ~~~~~ இத‌யும் கேளுங்க‌
இளைய‌ராஜா அடிச்ச‌து இது ~~~~~ இத‌யும் கேளுங்க‌ இது கூட சூப்பரு‌
ரஹ்மான் அடிச்ச‌து இது ~~~~~ இத‌யும் கேளுங்க‌
ஹாரிஸ்
அடிச்ச‌து இது ~~~~~ இத‌யும் கேளுங்க‌

யுவன் சங்கர் ராஜா
அடிச்ச‌து இது ~~~~~ இத‌யும் கேளுங்க‌
கார்திக் ராஜா
அடிச்ச‌து இது ~~~~~ இத‌யும் கேளுங்க‌
வித்தியாசாகர்
அடிச்ச‌து இது ~~~~~ இத‌யும் கேளுங்க‌
S A ராஜ்குமார் அடிச்ச‌து இது ~~~~~ இத‌யும் கேளுங்க‌
மனிசர்மா
அடிச்ச‌து இது ~~~~~ இத‌யும் கேளுங்க‌

இந்த லிஸ்ட் ரொம்ப சின்னது தாங்க. முழூசா பாக்க
இங்க சொடுக்குங்க....

ந‌ன்றி http://www.itwofs.com/ உங்க‌ளுக்கு தெரிஞ்ச‌த‌யும் தெரிவித்து இந்த‌ லிஸ்ட் வ‌ளர‌ உத‌வி செய்ங்க‌...

இதுவும் ஒரு நல்ல லிஸ்ட்....

அப்சட் ஆயிடீங்களா? நானும் தான்....

உங்க‌ளுக்கு தெரிந்த‌ ம‌ற்றும் தெரியாத‌ எல்‌லாரும் லிஸ்ட்ல‌ இருக்காங்க‌...அத‌னால‌ க‌வ‌ல‌ப‌டாதீங்க‌...

அடுத்த‌ த‌ட‌வ‌ யார‌வ‌து இளம் மியூசிக் டைரக்டர் க‌ம்போஸ் ப‌ன்ன‌ தாய்லாந்து போறாரு, குளிர்பிர‌தேச‌ம் போறாருன்னு படிக்கிறபோ...உங்க முக‌த்துல‌ ஒரு ந‌முட்டு சிரிப்பு வ‌ரும்முல்ல‌? அதுபோதும்ங்க எனக்கு ....


~மாற‌ன்


தமிழ் சினிமாவும் ஒரிஜினாலிட்டியும் எழுதறப்போவே இசை திருட்டையும் பத்தி எழுதிடனும்னுதான் நெனச்சேன்...கட்டுரை என்னவோ ரொம்ப பெருசா போயிடிச்சி...அது தான் இந்தப் பதிவு.... நீங்க‌ ப‌டிக்க‌லன்னா அத‌யும் கொஞ்ச‌ம் ப‌டிங்க‌..

Monday, February 19, 2007

தமிழ் சினிமாவும் ஒரிஜினாலிட்டியும்

இங்கு சுட்ட படம் மட்டுமே காட்டப்படும்

"இப்ப எல்லாம் என்ன படம் எடுக்குரானுவோ...அந்த காலத்துல..."

"ஐயோ..இந்த பெருசு ரவுசு தாங்க முடியல மச்சி" அப்டின்னு பாஸ்கரிடம் கமென்ட் அடிச்சது நல்லா ஞாபகம் இருக்கு...நேத்து தான் நடந்தது போல கூட இருக்கு...

ரஜினி கமல் உச்சதுல இருந்த காலத்துல தான் எனக்கு சினிமா கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது. அது வரைக்கும் டிவில வர படங்கள்ள "சண்டை பயிற்சி" இருந்தாத்தான் அந்த வாரம் சந்தோசமா இருக்கும். நானும் பாஸ்கரும் எத்தன சண்டன்னு கூட எண்னுவோம். "சண்டை பயிற்சி" இல்ல‌னா மனசு ரொம்ப கஷ்டமா போய்டும்.

எம்ஜிஆர் சிவாஜி, ஏன் பகவதர் வரைக்கும் கூட டீவில பாத்து பாத்து தெரிஞ்சிகிட்டதுதான்...போக போக சினிமா மேல ரொம்ப ஆர்வம் வந்து பல படங்களை பார்க ஆரம்பித்து...ஒரு சமயத்துல சினிமா பக்கம் போலாமான்னு நினைத்தது கூட உண்டு...நைணாவும் அவரோட 8ம் நம்பர் பாட்டா செருப்பும் நினைவுக்கு வர ஐடியாவ அப்படியே கைவிடவேண்டியதா போச்சு...

இப்போ வர்ர படங்கள பாக்கரப்போ நம்ம பெருசு ஏனோ சம்மந்தமே இல்லாம கண்ணு முன்னால வந்து போகுது...ஏதோ புரியுர மாதிரி இருக்கு...ஐயோ மச்சி வயசு ஆயிடிச்சோ?

"இல்லடா உனுக்கு ஞானோதயம் வந்துடுசி", பாஸ்கர்.

அவன கண்டுகாம உக்கார்ந்து நல்லா யோசிச்சா...நம்ம தமிழ் சினிமாகாரங்க நமக்கு என்னமா காதுல பூ சுத்துராங்கன்னு நல்லா புரியுது...

ஒரே கதை தமிழ்ல வந்து, தெலுங்குக்கு போய் திரும்பி தமிழுக்கே வருது, அதயும் நம்ம ஆளு விசில் அடிச்சி பாக்கறான்...

ஞானோதயம் flashback:

மெட்றாஸ் வடபழனில ரூம் எடுத்து தங்கி இருந்தப்போ, எனக்கு நிறய அசிஸ்டென்ட் டைரக்டர்கள் பழக்கம். ரூம்மேட்ல ஒருத்தர் அசிஸ்டென்ட் டைரக்டர் இன்னோருத்தர் அசிஸ்டென்ட் கேமெரா மேன். அவங்க ரெண்டுபேரையும் பாக்க பல அசிஸ்டென்டுக்கள், பல அல்லக்கைகள் வருவாங்க...

அல்லக்கை? ~ எதோ ஒரு சத்தியராஜ் படத்துல இந்த வார்த்தைக்கு விளக்கம் தந்த மாதிரி ஒரு ஞாபகம். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்.

ஜாலியா போவும்...காசு இல்லாம கஷ்டப்பட்டாலும் ஒரு லட்சியத்தோடத்தான் இருப்பாய்ய்ங்க... (நன்றி: வடிவேலு)

எல்லா அசிஸ்டென்ட்டும் குறைந்தது மூனு கதை வெச்சு இருப்பாங்க...அதுல ஒன்னாவது கண்டிப்பா ஆக்~ஷன் கதையா இருக்கும். ரொம்ப க்குளோசா இருந்தா கூட தன்னுடய கதையை இன்னோரு அசிஸ்டென்ட்டுக்கு சொல்ல மாட்டாங்க (விதிவிலக்குகள் உண்டு)

நான் சினிமாவை சேர்ந்தவன் இல்லங்கறதால எல்லாரும் என்கிட்ட சொல்லி எப்படி இருக்குன்னு கேப்பாங்க...சிலருடய கதை சொல்லும் தெரம வியக்கவைக்கும்...நானும் என் பங்குக்கு இது அங்க வந்து இருக்கே இங்க வந்து இருக்கேனு எடுத்து கொடுப்பேன்...அவங்களுக்கு அது தெரியாம இருக்காது...கண்டுபிடிச்சிட்டியான்னு கண்ண சிமிட்டுவாங்க...ஒருத்தர் எந்த படத்த உல்டா பண்றாறுன்னு சொல்லிட்டே ஆரம்பிப்பாரு...பெரும்பாலும் பல கதைங்கல உல்டா பண்ணியே ஒரு கதை அமையும்...ஆங்கிலப் படங்களின் ஆதிக்கமும் அதிகமா இருக்கும்...

சிலருடய சினிமா அறிவ பாத்தா ரொம்ப ஆச்சரியமா இருக்கும்...ஒரு படத்த பாத்து ரொம்ப புல்லரிச்சி போய் ஆஹா ஓஹோன்னு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் ஃப்ரன்டுகிட்ட பேசிகிட்டுருந்தேன்...அவரு இன்னாடான்னா அந்த படம் எங்கெல்லாமிருந்து copy&paste பன்னப்பட்டதுன்னு அக்குவேரு ஆனிவேரா பிரிச்சிமேஞ்சிடாரு....

"உக்காந்து யோசிப்பாய்ய்ய்ங்களோ?", பாஸ்கர்.

நக்கல் பண்ணாக்கூட அவன் சொல்ரதுல உண்மை இருந்தது...எல்லா அசிஸ்டென்ட்டுகளுக்கும் வேலை நேரம் போக இது தான் யோசனை...வடபழனில இது போல எவ்வளோ பேர் தெரியுமா?

ஏன் இவங்களுக்கு சுயமா சிந்திக்கதத் தெரியாதான்னு நீங்க கேட்டா...உங்களுக்கு இன்னும் அந்த எடத்தோட complexity புரியலன்னு தான்னு நான் சொல்வேன்...

குபேரன்ல இருந்து குப்பன் சுப்பன் வரைக்கும் புழங்கும் எடம்...கோடி கணக்குல பனம், புகழ், மற்றும் எல்லா சுகங்கள்...எல்லார் கண்ணுலயும் கனவு...ஒரு படம் நல்லா ஓடுனா அதே மாதிரி 10 படம் பூஜை போடுவாங்க...அதுல 3 படம் ரிலீஸ் ஆனா பெருசு...எவ்வளோ படங்கள் பெட்டிக்குள்ள முடங்கி கெடக்குதுன்னு யாருக்கும் தெரியாது...

ஒரு டைரக்டர் தன்னோட முதல் படத்துல காசு பாக்கறது ரொம்ப கஷ்டம்...ஒரு வெற்றி தந்தாதான் காசு...இல்லினா இவ்வளோ நாள் பட்ட கஷ்டம் வேஸ்ட்.

எனக்கு இந்த அசிஸ்டென்ட்டுகள பாக்கரப்போ பல முறை பாவமாத்தான் இருக்கும்...ஆனா இன்னிக்கு பெரிய பெரிய டைரக்டர்களா இருக்கும் பலர் இப்படி இருந்தவங்கத்தான்...

மேட்டருக்கு வருவோம்...

இந்த அசிஸ்டென்ட்டுக்கள் அங்க இங்க சுடறது பெரிய விஷயமா தெரியல...ஏன்னா அதுல எத்தன படம் வெளிய வரும்ன்றது பெரிய கேள்விக்குறி.

ஆனா நாம எல்லாரும் சேந்து சூப்பரு டூப்பருன்னு சொல்ற பல ஜாம்பவான்கள்...பல எடங்கள்ளருந்து உருவி நல்லா மசாலா கலந்து கொடுகறத பாத்தா இன்னா சொல்றதுன்னே தெரியல...

The Godfather (1972) The GodfatherII (1974)
Marlon Brando, Al Pacino Al Pacino, Robert De Niro, Robert Duvall

இந்த படத்த நம்ம தமிழ் ஜனங்க கண்டிப்பா பாக்கனும்னு நான் கேட்டுக்கறேன். இந்த படத்துல இருந்து சுட்ட சீன்கள பல படத்துல பாத்து இருக்கேன்...

நம்ம மனிரத்னத்திலிருந்து...செல்வராகவன் வரைக்கும் யாரும் இந்த படத்த விட்டுவெக்கல...

ஏன், நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா படத்துல கூட "அண்ணன்டா, அவர் எல்லாருக்கும் அண்ணன்டா"ன்னு வர்ர அந்த புல்லரிக்கவெக்கிர சீன் கூட இந்த படத்திலிருந்து சுட்டது தான்...

"தலீவர சொல்லி குத்தமில்ல...அவ்ரா கத எழுதுனாரு?", பாஸ்கர்.

ஒரு லிஸ்ட் போடுவோமா?

மனிரத்னம் ~ நாயகன் ~ கொஞ்சம் கதை ~ கொஞ்சம் சீன்ஸ்.. எல்லருக்கும் தெரிஞ்ச விசயம் தான் இது...

லேடஸ்ட்டா புதுபேட்டை படத்துல வர்ர மொத்தமா எல்லா எதிரிகளயும் ஒரே சமயதுல போட்டு தள்ளுறது அங்க சுட்டது தான்...ஒரிஜினல்ல சொந்த அண்ணன ஹீரோ மைக்கல் போட சொல்லுவாரு இதுல நம்ம ஹீரோ தனுசு ஒரு படி மேல போயி சொந்த அப்பாவவையே போட சொல்லுவாரு...

"அடோப்ப்பாவீ...", பாஸ்கர். ரொம்ப‌ இன்வால்வ் ஆயிட்டாம்போல‌....



இது எல்லாத்துகும் மேல, நம்ம மரத்தமிழன் கமலஹாசன், இந்த அருமையான படத்த முழூசா அமுக்கி எடுத்த படம் தான் "தேவர் மகன்"

"நாயகன் படத்துல நடிக்கிறப்போ அடிக்கடி பாத்து பாத்து உறு ஏத்தி இருப்பாரு, அதான்...", பாஸ்கர் நமுட்டு சிரிப்புடன். ரஜினிய விட்டுட்டு கமல் சைடு வந்தவுடன் முகத்துல அவ்வளோ சந்தோசம்...

தேவர் மகன் படத்துல கமல் பக்காவா ப்ளான் பண்ணி கதைய அருமையா நம்ம ஊருக்கு ஏத்தமாதிரி மாத்தி இருப்பாரு...அவரோட திறமைய நான் கொஞ்சம் கூட குறைவா சொல்ல இங்க வரல...

கொஞ்சம் கேளுங்க....

ஹீரோ மைக்கல் மிலிடெரில இருந்து குடும்பத்த பாக்க ட்ரைன்ல வந்து எறங்கறாரு. கூட ஒரு பொன்னு.

ஹீரோ க‌மல் வெளிநாட்ல இருந்து படிப்ப முடிச்சிட்டு ட்ரைன்ல வந்து எறங்கறாரு. கூட ஒரு பொன்னு.

"ட்ரைன்ல வரதெல்லாம் ஒரு காப்பியாடா?", பாஸ்கர், சூரியன் படத்துல வர கவுண்டமனி ஸ்டயில்ல.

ஹீரோக்கு அவ்வளவா உள்ளுர் சமாச்சாரத்து மேல கொஞ்ச‌‌ம் கூட‌ ப‌ற்று இல்ல‌...அவ‌ரோட‌ ல‌ட்சியம் சிட்டியில‌ ரெஸ்டாரென்ட் வெக்க‌ர‌து...(ரென்டு ப‌ட‌த்துல‌யும்)

அப்பா தான் ரொம்ப‌ முக்கிய‌மான‌ ஆளு...

விதிவ‌ச‌த்தால காட்க்ஃபாத‌ர் ப‌டுக்க‌யில‌...அண்ண‌ன‌யும் எதிரிங்க‌ கொலை செஞ்சிடுவாங்க, இன்னோரு அண்ணன் எப்பவும் புல் சரக்குள இருப்பாரு (Godfather)

விதிவ‌ச‌த்தால அப்பா இறந்துவிட...இருக்குற ஒரே அண்ணன் எப்பவும் புல் சரக்குள இருப்பாரு (தேவர் மகன்)

வேற‌‌ வ‌ழி இல்லாம‌ ஹீரோ பொறுப்ப‌ ஏத்துப்பாரு (ரென்டு ப‌ட‌த்துல‌யும்)

அப்பா குழைந்தங்க கூட விளையாடிகிட்டு இருக்குறப்போ சாவாரு (ரென்டு ப‌ட‌த்துல‌யும்)

மத்த‌ப‌டி கிராம‌த்து ச‌மாச்சாரம், கோயில் எல்லாம் ஒரிஜின‌ல்னு நினைக்கிறேன்....

நான் யோசிச்சி பாத்த‌துல‌ ஒரு பட‌த்த‌ உருவாக்க ஒரு அறிவாளிக்கு இது போதும்..

"அதுக்கு மேல‌ காப்பி அடிகிற‌துக்கு கிராமத்து கதைல ஸ்கோப் இல்ல‌ ம‌ச்சீ...", பாஸ்க‌ர் தெம்பா...

இது போல‌ ப‌ல‌ ப‌ட‌ங்க‌ள்...குறிப்பிட்டு ஒருத்த‌ர‌ விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ன‌னும்னு எந்த‌ ஆசையும் கிடையாது...என‌க்கு ரொம்ப‌ பிடித்த‌ க‌லைஞ‌ன் ‌ குடுத்த‌ அல்வா ரொம்ப‌ நாளைக்கு அப்புற‌‌ம் தெரிஞ்சி வ‌ந்த‌ ஒரு ஏமாற்ற‌த்தின் வெளீயீடு தான் இது....


இந்த‌ பிளாக்கில் சுட்ட‌ப் ப‌ட‌ம்னு ஒரு லிஸ்ட் போட‌லாம்னு இருக்கேன்....உங்க உத‌வி தேவை....


இன்னோரு சைடு மியூசிக் கொள்ள‌யர்க‌ள்...அவ‌ங்க‌ வேலை இன்னும் ஈசி...அத‌ப்ப‌த்தி த‌னியா ஒரு ப‌க்க‌ம் போட‌லாம்.....


க‌ருத்துக‌ள‌ தெரிவியுங்க‌...தூய‌ த‌மிழ்ல‌ எழுதாமைக்கு ம‌ன்னிக்க‌வும்....


வணக்கமுங்கணா,


~தமிழ் மாற‌ன்




Sunday, February 18, 2007

ப்ராணிக‌ளும் சினிமாவும்....

ப்ராணிக‌ளும் சினிமாவும்....


ச‌மீப‌த்துல‌ Turner & Hooch (1989) ம‌ற்றும் The Edge (1997) என்ற ரெ‌ண்டு ப‌ட‌ங்க‌ பாத்தேன்...அதான் இங்க‌ வ‌ந்து கொஞ்சம் பொல‌ம்ப‌லாம்னு...(ஹீ..ஹீ)

இந்த‌ ப‌ய‌லுவ‌ மிருக‌ங்க‌ள‌ வெச்சு என்ன‌ம்மா எடுக்க‌ரானுங்க‌ப்பா....

ட‌ர்ன‌ர் & ஹூச் படத்துல‌ டாம் ஹேன்க்ஸ் ம‌ற்றும் ஒரு நாய் (சாரி..நாய் சார் அவர்கள்) நடிச்சி இருப்பாங்க. சாதார‌ன‌மா 1989 ப‌ட‌ம்லாம் உக்காந்து பாக்க‌ மாட்டேன்...டாம் ஹேன்க்ஸ் பேர‌ போட்ட‌தால‌ கொஞ்ச நேர‌ம் பாக்க‌லாம்னு உக்காந்தேன்...

உண்மை‌யிலியே ப‌ட‌ம் போன‌தே தெரிய‌ல‌...ப‌ட‌ம் புல்லா ஒரே க‌ல‌க்க‌ல் தான்...அதுவும் அந்த நாயொடய‌ (நாய் சார் அவர்களுடய‌) ந‌டிப்பு...பாத்தாத்தான் தெரியும்...அவ்வ‌ள‌வு அருமை....

ஆர‌ம்ப‌த்துல‌ ட‌ர்னர் (டாம்) ஹூச்ச (நாய் அவர்கள‌) பாத்து ப‌ய‌ப்படுற‌தும்...நாய் பன்ற குறும்புகளும் மிக அருமை...ஜாலியா போர‌ ப‌ட‌ம் அப்புடியே சூடு புடிச்சி கொஞ்ச‌ம் சீரிய‌சா போயி உருக்க‌மா ஆயி...பெஜார் ஆயிட்ச்சிப்பா...மிக‌ அருமை...

நேரம் கெட‌ச்சா பாருங்க‌...

The Edge ப‌ட‌மும் இப்டி தான் ஆர‌ம்பிச்சிச்சி...ஆந்த‌னி ஆப்கின்ஸ் பேர‌ போட்ட‌தால‌ கொஞ்ச‌ம் உக்காந்தேன்...ப‌ட‌ம் ஸ்பீடா ஆர‌ம்பிச்சி ஸ்பீடாவே போச்சி...

ஆந்த‌னி ஆப்கின்ஸ் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர்...ஹெலிகாப்டர்ல ஒரு காட்டுக்குள்ள போரப்ப விபத்தாகி போயி அவரும் ரென்டு பேரும் காட்டுக்குள்ள மாட்டிக்கிறாங்க....

சரி அவ்ளோ பெரிய கோடீஸ்வரன் எவனாவது வந்து காப்பாத்துவான்னு பாத்தா திடீர்னு வந்து கலாய்க்கிறது ஒரு பெரிய கரடி...

ஐய்யோ...அப்பா...கரடிய பத்தி சின்ன வயசுல படிச்ச கதையில..ஒருத்தன் மரத்து மேல போயி ஏறிப்பான்...ந‌ம்ம ஹீரோவோ செத்த மாதிரி மூச்சி உடாம படுத்து தப்பிச்சுருவாரு...நல்லா குட்தான்ய்யா நமக்கு அல்வா...

அந்த புக்குல கரடிய அழகா வேற வரெஞ்சி இருந்த மாதிரி ஒரு ஞாபகம்...ஆனா இந்த படத்த பாத்ததுல கரடி மேல‌ நம்ம வெச்சி இருந்த இமேஜ் எல்லாம் புஸ்ஸாயிடிச்சி...

பாக்கற‌ப்போ அப்படி ஒரு பயம் (நெச‌மாபா...) அருமையா எடுத்து இருக்காங்க...

நேரம் கெட‌ச்சா பாருங்க‌...

அதே போல The Ghost and the Darkness (1996) (Val Kilmer, Micheal Dougles) சிங்கம் பத்தின கதை...ஆண் சிங்கத்தப் பத்தி நக்கல் பன்றதுக்கு முன்ன இந்த படத்த பாத்து அது என்ன என்ன பன்னும்னு தெரிஞ்சிக்கிங்க...(இதுவும் பயமா இருந்துதுபா...)

நம்ம ஊர்ல மிருகங்கள வெச்சி வந்த படங்க ரொம்ப கம்மி...அதுலயும் முக்காவாசி பாம்புதான் வரும் (யானை நெக்ஸ்ட்)...நம்மாளுங்க அதுல ஓவரா சென்டிமென்ட வேற கலந்து...அந்த மிருகத்தொடய உண்மையான பண்பை தெரிஞ்சிக்க விடாம பன்னிப்புட்டாய்ய்ய்ய்ய்ங்க...


மேல சொன்ன எல்லா படங்களும் முதல்ல ஹீரோ பேர வெச்சி பாத்த படங்க தான்...இல்லினா இவ்வளோ எடுபட்டு இருக்குமான்னு தெரியல... (கண்டிப்பா நா பாத்து இருப்பனான்றது சந்தேகம்...)

இந்த மாதிரி ஒரு ப்ராணியயும் ஒரு ஃபேமஸான‌ ஹீரொவவையும் வெச்சி நம்ம ஊர்ல‌ நல்லா ஒரு படம் எடுக்க முடியாதா? எடுத்தா ஓடாதா?... இதுக்கு வேண்டியது பணமா? மனமா?

‍~மாறன்


என‌க்கு பிடித்த‌ இய‌க்குன‌ர் ‍~ கௌதம் மேனன்

கௌதம் மேனன்

கௌதம் மேனன், என்னுடய, ஃபேவரைட் இயக்குனர்களில் ஒருவர். அவருடைய "மின்னலே" ப‌ட‌ம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

எப்பவுமே ஹீரோக்கள் என்ன‌ படம் பன்றாங்கன்னு தெரிஞ்சிக்கிறத விட என்னுடய அபிமான இயக்குனர்கள் என்ன படம் பன்றாங்கன்னு தெரிஞ்சிக்கிறதுலயே எனக்கு ஆர்வம் அதிகம். அதனால ந‌ம்ம லிஸ்ட் ரொம்ப சின்னது தான்...

மின்னலே படத்த பாத்த‌ப்போ நம்ம லிஸ்ட்ல ஒன்னு கூடுனது மனசுக்கு சந்தோசமா இருந்தது...

இயக்குனர்கள ஃபாலோ பன்றது மட்டும் இல்லாம...அவரோட டீமயும் சேத்து ஃபாலோ பன்னுவேன்...இந்த படத்துலயும் ஒரு அருமயான காம்பினேஷன்...கௌதம் மேனன், ஹாரிஸ், தாம‌ரை, ராஜசேகர்...நிறைவான ஒரு படம்.

அடுத்த பட‌த்துக்காக காத்திருப்பு...கொஞ்சம் நாளாச்சி...ஹிந்தியில மின்னலே படத்த முடிச்சிட்டு வந்தாரு..."காக்க காக்க", ஒரு போலீஸ் படத்துக்கு இத விட சூப்பரா பேர் வெக்க முடியுமா?

கௌதமின் தமிழார்வத்தை (தமிழ்த் தொண்டு எனக்கூட சொல்லலாம்) இந்த நேரத்துல மனம் விட்டு பாராட்டுகிறேன்...

ரொம்ப‌ வித்தியாச‌மா இருந்த‌து "காக்க காக்க". போலீஸ் ப‌ட‌ம்னு முன்னலயே தெரியும், ஆனா ப‌டத்தோட‌‌ தாக்க‌ம் போக‌ சில‌ நாளாச்சி...இது போல‌ ஒரு ப‌ட‌ம் இதுக்கு முன்னால‌ வ‌ந்த‌ மாதிரி தெரிய‌ல‌...மொத்த‌ டீமுமே கலக்கியிருந்தாங்க‌...

ராஜ‌சேக‌ர் செம‌யா பின்னியிருந்தாரு...ஒரு பாட்டுல ஜீப்பொடய டயர்ல கேமரா வெச்சு எடுத்து இருப்பாரு...தொழில்நுட்பமும் திறமையும் ஒரே ச‌ம‌ய‌த்துல‌ சேர்ந்து கலக்கிய படம்...கொஞ்சம் வயலென்ஸ் அதிகமோ?

திரும்ப‌வும் அதே ப‌ட‌த்த‌ தெலுங்குல‌ எடுக்க‌ப்போயிடாரு...காத்திருப்ப‌தில் த‌வ‌றில்லை...

அடுத்த‌ ப‌ட‌ம் க‌ம‌லுட‌ன்...வாவ்...விச‌ய‌த்த‌ கேள்விப்ப‌ட்ட‌வுட‌னே ப‌ட‌த்த‌ ப‌த்தின‌ எதிர்ப்பார்ப்பு எக்க‌ச்ச‌க்க‌மா எகிறிப்போச்சி...என‌க்கு ம‌ட்டுமில்ல‌ எல்லாருக்கும் தான்னு நல்லா தெரியும்...

முத‌ல் நாளே ஒரு படயை‌யே கூட்டி போயி ப‌ட‌ம் பாத்தேன்...எவ்வளவு ப‌ன்ப‌ட்ட‌ சினிமா ர‌சிக‌ன‌யும் கொஞ்ச‌ம் புர‌ட்டி போட‌ர‌ ப‌ட‌ம்...கௌதமின் த‌ரம் க‌ண்டிப்பா இருந்த‌து...ஆனா கூட‌ வ‌ந்த‌ பெண்க‌ள் ரொம்ப‌ ப‌ய‌ந்துட்டாங்க‌...என்ன இன்னோரு த‌ட‌வ‌ பாக்க‌றியான்னு யாராது கேட்டா ச‌த்திமா பாக்க‌மாட்ட‌ம்பா...ரொம்ப‌ ஓவ‌ரா இருந்த‌து...த‌மிழ் ஜ‌ன‌ங்க‌ இதுக்கு முன்னாடி இப்ப‌டி பாத்து இருக்க‌ மாட்டாங்க‌ன்னே நெனைக்கிறேன்...காரத்த‌ கொஞ்சம் கொரச்சி இருக்கலாமோ?

கௌதம் மேன‌ன‌ ப‌த்தி ஒன்னுமே தெரியாத‌வ‌ங்க‌ள கூட ஓவரா பில்ட‌ப் குடுத்து கூட்டினு போன‌து த‌ப்போன்னு ம‌ன‌சு கேட்டுது...

அடுத்த‌ த‌ட‌வ‌ கொஞ்ச‌ம் அட‌க்கி வாசிக்க‌னும்னு ம‌ன‌சு சொல்லிச்சி...ச‌ரின்னே ப‌ட்டுது...

பச்சைக்கிளி முத்துச்சரத்த ஒரு வாரம் கழிச்சி பாக்கலாம்னு இருக்கேன் :)

கொசுறு:‌
டிவில டிரைலர் பாக்கற‌ப்ப எங்கயோ பாத்தமாதிரி இருக்கேன்னு நினச்சேன்...Derailed(2005) படம் கெடச்சா கொஞ்சம் பாத்து அதே மாதிரி இருக்கான்னு சொல்லுங்களேன்...அடுத்த‌ வார‌ம் நானே தெருஞ்சிப்பேன்...



~மாறன்