Monday, February 19, 2007

தமிழ் சினிமாவும் ஒரிஜினாலிட்டியும்

இங்கு சுட்ட படம் மட்டுமே காட்டப்படும்

"இப்ப எல்லாம் என்ன படம் எடுக்குரானுவோ...அந்த காலத்துல..."

"ஐயோ..இந்த பெருசு ரவுசு தாங்க முடியல மச்சி" அப்டின்னு பாஸ்கரிடம் கமென்ட் அடிச்சது நல்லா ஞாபகம் இருக்கு...நேத்து தான் நடந்தது போல கூட இருக்கு...

ரஜினி கமல் உச்சதுல இருந்த காலத்துல தான் எனக்கு சினிமா கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது. அது வரைக்கும் டிவில வர படங்கள்ள "சண்டை பயிற்சி" இருந்தாத்தான் அந்த வாரம் சந்தோசமா இருக்கும். நானும் பாஸ்கரும் எத்தன சண்டன்னு கூட எண்னுவோம். "சண்டை பயிற்சி" இல்ல‌னா மனசு ரொம்ப கஷ்டமா போய்டும்.

எம்ஜிஆர் சிவாஜி, ஏன் பகவதர் வரைக்கும் கூட டீவில பாத்து பாத்து தெரிஞ்சிகிட்டதுதான்...போக போக சினிமா மேல ரொம்ப ஆர்வம் வந்து பல படங்களை பார்க ஆரம்பித்து...ஒரு சமயத்துல சினிமா பக்கம் போலாமான்னு நினைத்தது கூட உண்டு...நைணாவும் அவரோட 8ம் நம்பர் பாட்டா செருப்பும் நினைவுக்கு வர ஐடியாவ அப்படியே கைவிடவேண்டியதா போச்சு...

இப்போ வர்ர படங்கள பாக்கரப்போ நம்ம பெருசு ஏனோ சம்மந்தமே இல்லாம கண்ணு முன்னால வந்து போகுது...ஏதோ புரியுர மாதிரி இருக்கு...ஐயோ மச்சி வயசு ஆயிடிச்சோ?

"இல்லடா உனுக்கு ஞானோதயம் வந்துடுசி", பாஸ்கர்.

அவன கண்டுகாம உக்கார்ந்து நல்லா யோசிச்சா...நம்ம தமிழ் சினிமாகாரங்க நமக்கு என்னமா காதுல பூ சுத்துராங்கன்னு நல்லா புரியுது...

ஒரே கதை தமிழ்ல வந்து, தெலுங்குக்கு போய் திரும்பி தமிழுக்கே வருது, அதயும் நம்ம ஆளு விசில் அடிச்சி பாக்கறான்...

ஞானோதயம் flashback:

மெட்றாஸ் வடபழனில ரூம் எடுத்து தங்கி இருந்தப்போ, எனக்கு நிறய அசிஸ்டென்ட் டைரக்டர்கள் பழக்கம். ரூம்மேட்ல ஒருத்தர் அசிஸ்டென்ட் டைரக்டர் இன்னோருத்தர் அசிஸ்டென்ட் கேமெரா மேன். அவங்க ரெண்டுபேரையும் பாக்க பல அசிஸ்டென்டுக்கள், பல அல்லக்கைகள் வருவாங்க...

அல்லக்கை? ~ எதோ ஒரு சத்தியராஜ் படத்துல இந்த வார்த்தைக்கு விளக்கம் தந்த மாதிரி ஒரு ஞாபகம். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்.

ஜாலியா போவும்...காசு இல்லாம கஷ்டப்பட்டாலும் ஒரு லட்சியத்தோடத்தான் இருப்பாய்ய்ங்க... (நன்றி: வடிவேலு)

எல்லா அசிஸ்டென்ட்டும் குறைந்தது மூனு கதை வெச்சு இருப்பாங்க...அதுல ஒன்னாவது கண்டிப்பா ஆக்~ஷன் கதையா இருக்கும். ரொம்ப க்குளோசா இருந்தா கூட தன்னுடய கதையை இன்னோரு அசிஸ்டென்ட்டுக்கு சொல்ல மாட்டாங்க (விதிவிலக்குகள் உண்டு)

நான் சினிமாவை சேர்ந்தவன் இல்லங்கறதால எல்லாரும் என்கிட்ட சொல்லி எப்படி இருக்குன்னு கேப்பாங்க...சிலருடய கதை சொல்லும் தெரம வியக்கவைக்கும்...நானும் என் பங்குக்கு இது அங்க வந்து இருக்கே இங்க வந்து இருக்கேனு எடுத்து கொடுப்பேன்...அவங்களுக்கு அது தெரியாம இருக்காது...கண்டுபிடிச்சிட்டியான்னு கண்ண சிமிட்டுவாங்க...ஒருத்தர் எந்த படத்த உல்டா பண்றாறுன்னு சொல்லிட்டே ஆரம்பிப்பாரு...பெரும்பாலும் பல கதைங்கல உல்டா பண்ணியே ஒரு கதை அமையும்...ஆங்கிலப் படங்களின் ஆதிக்கமும் அதிகமா இருக்கும்...

சிலருடய சினிமா அறிவ பாத்தா ரொம்ப ஆச்சரியமா இருக்கும்...ஒரு படத்த பாத்து ரொம்ப புல்லரிச்சி போய் ஆஹா ஓஹோன்னு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் ஃப்ரன்டுகிட்ட பேசிகிட்டுருந்தேன்...அவரு இன்னாடான்னா அந்த படம் எங்கெல்லாமிருந்து copy&paste பன்னப்பட்டதுன்னு அக்குவேரு ஆனிவேரா பிரிச்சிமேஞ்சிடாரு....

"உக்காந்து யோசிப்பாய்ய்ய்ங்களோ?", பாஸ்கர்.

நக்கல் பண்ணாக்கூட அவன் சொல்ரதுல உண்மை இருந்தது...எல்லா அசிஸ்டென்ட்டுகளுக்கும் வேலை நேரம் போக இது தான் யோசனை...வடபழனில இது போல எவ்வளோ பேர் தெரியுமா?

ஏன் இவங்களுக்கு சுயமா சிந்திக்கதத் தெரியாதான்னு நீங்க கேட்டா...உங்களுக்கு இன்னும் அந்த எடத்தோட complexity புரியலன்னு தான்னு நான் சொல்வேன்...

குபேரன்ல இருந்து குப்பன் சுப்பன் வரைக்கும் புழங்கும் எடம்...கோடி கணக்குல பனம், புகழ், மற்றும் எல்லா சுகங்கள்...எல்லார் கண்ணுலயும் கனவு...ஒரு படம் நல்லா ஓடுனா அதே மாதிரி 10 படம் பூஜை போடுவாங்க...அதுல 3 படம் ரிலீஸ் ஆனா பெருசு...எவ்வளோ படங்கள் பெட்டிக்குள்ள முடங்கி கெடக்குதுன்னு யாருக்கும் தெரியாது...

ஒரு டைரக்டர் தன்னோட முதல் படத்துல காசு பாக்கறது ரொம்ப கஷ்டம்...ஒரு வெற்றி தந்தாதான் காசு...இல்லினா இவ்வளோ நாள் பட்ட கஷ்டம் வேஸ்ட்.

எனக்கு இந்த அசிஸ்டென்ட்டுகள பாக்கரப்போ பல முறை பாவமாத்தான் இருக்கும்...ஆனா இன்னிக்கு பெரிய பெரிய டைரக்டர்களா இருக்கும் பலர் இப்படி இருந்தவங்கத்தான்...

மேட்டருக்கு வருவோம்...

இந்த அசிஸ்டென்ட்டுக்கள் அங்க இங்க சுடறது பெரிய விஷயமா தெரியல...ஏன்னா அதுல எத்தன படம் வெளிய வரும்ன்றது பெரிய கேள்விக்குறி.

ஆனா நாம எல்லாரும் சேந்து சூப்பரு டூப்பருன்னு சொல்ற பல ஜாம்பவான்கள்...பல எடங்கள்ளருந்து உருவி நல்லா மசாலா கலந்து கொடுகறத பாத்தா இன்னா சொல்றதுன்னே தெரியல...

The Godfather (1972) The GodfatherII (1974)
Marlon Brando, Al Pacino Al Pacino, Robert De Niro, Robert Duvall

இந்த படத்த நம்ம தமிழ் ஜனங்க கண்டிப்பா பாக்கனும்னு நான் கேட்டுக்கறேன். இந்த படத்துல இருந்து சுட்ட சீன்கள பல படத்துல பாத்து இருக்கேன்...

நம்ம மனிரத்னத்திலிருந்து...செல்வராகவன் வரைக்கும் யாரும் இந்த படத்த விட்டுவெக்கல...

ஏன், நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா படத்துல கூட "அண்ணன்டா, அவர் எல்லாருக்கும் அண்ணன்டா"ன்னு வர்ர அந்த புல்லரிக்கவெக்கிர சீன் கூட இந்த படத்திலிருந்து சுட்டது தான்...

"தலீவர சொல்லி குத்தமில்ல...அவ்ரா கத எழுதுனாரு?", பாஸ்கர்.

ஒரு லிஸ்ட் போடுவோமா?

மனிரத்னம் ~ நாயகன் ~ கொஞ்சம் கதை ~ கொஞ்சம் சீன்ஸ்.. எல்லருக்கும் தெரிஞ்ச விசயம் தான் இது...

லேடஸ்ட்டா புதுபேட்டை படத்துல வர்ர மொத்தமா எல்லா எதிரிகளயும் ஒரே சமயதுல போட்டு தள்ளுறது அங்க சுட்டது தான்...ஒரிஜினல்ல சொந்த அண்ணன ஹீரோ மைக்கல் போட சொல்லுவாரு இதுல நம்ம ஹீரோ தனுசு ஒரு படி மேல போயி சொந்த அப்பாவவையே போட சொல்லுவாரு...

"அடோப்ப்பாவீ...", பாஸ்கர். ரொம்ப‌ இன்வால்வ் ஆயிட்டாம்போல‌....



இது எல்லாத்துகும் மேல, நம்ம மரத்தமிழன் கமலஹாசன், இந்த அருமையான படத்த முழூசா அமுக்கி எடுத்த படம் தான் "தேவர் மகன்"

"நாயகன் படத்துல நடிக்கிறப்போ அடிக்கடி பாத்து பாத்து உறு ஏத்தி இருப்பாரு, அதான்...", பாஸ்கர் நமுட்டு சிரிப்புடன். ரஜினிய விட்டுட்டு கமல் சைடு வந்தவுடன் முகத்துல அவ்வளோ சந்தோசம்...

தேவர் மகன் படத்துல கமல் பக்காவா ப்ளான் பண்ணி கதைய அருமையா நம்ம ஊருக்கு ஏத்தமாதிரி மாத்தி இருப்பாரு...அவரோட திறமைய நான் கொஞ்சம் கூட குறைவா சொல்ல இங்க வரல...

கொஞ்சம் கேளுங்க....

ஹீரோ மைக்கல் மிலிடெரில இருந்து குடும்பத்த பாக்க ட்ரைன்ல வந்து எறங்கறாரு. கூட ஒரு பொன்னு.

ஹீரோ க‌மல் வெளிநாட்ல இருந்து படிப்ப முடிச்சிட்டு ட்ரைன்ல வந்து எறங்கறாரு. கூட ஒரு பொன்னு.

"ட்ரைன்ல வரதெல்லாம் ஒரு காப்பியாடா?", பாஸ்கர், சூரியன் படத்துல வர கவுண்டமனி ஸ்டயில்ல.

ஹீரோக்கு அவ்வளவா உள்ளுர் சமாச்சாரத்து மேல கொஞ்ச‌‌ம் கூட‌ ப‌ற்று இல்ல‌...அவ‌ரோட‌ ல‌ட்சியம் சிட்டியில‌ ரெஸ்டாரென்ட் வெக்க‌ர‌து...(ரென்டு ப‌ட‌த்துல‌யும்)

அப்பா தான் ரொம்ப‌ முக்கிய‌மான‌ ஆளு...

விதிவ‌ச‌த்தால காட்க்ஃபாத‌ர் ப‌டுக்க‌யில‌...அண்ண‌ன‌யும் எதிரிங்க‌ கொலை செஞ்சிடுவாங்க, இன்னோரு அண்ணன் எப்பவும் புல் சரக்குள இருப்பாரு (Godfather)

விதிவ‌ச‌த்தால அப்பா இறந்துவிட...இருக்குற ஒரே அண்ணன் எப்பவும் புல் சரக்குள இருப்பாரு (தேவர் மகன்)

வேற‌‌ வ‌ழி இல்லாம‌ ஹீரோ பொறுப்ப‌ ஏத்துப்பாரு (ரென்டு ப‌ட‌த்துல‌யும்)

அப்பா குழைந்தங்க கூட விளையாடிகிட்டு இருக்குறப்போ சாவாரு (ரென்டு ப‌ட‌த்துல‌யும்)

மத்த‌ப‌டி கிராம‌த்து ச‌மாச்சாரம், கோயில் எல்லாம் ஒரிஜின‌ல்னு நினைக்கிறேன்....

நான் யோசிச்சி பாத்த‌துல‌ ஒரு பட‌த்த‌ உருவாக்க ஒரு அறிவாளிக்கு இது போதும்..

"அதுக்கு மேல‌ காப்பி அடிகிற‌துக்கு கிராமத்து கதைல ஸ்கோப் இல்ல‌ ம‌ச்சீ...", பாஸ்க‌ர் தெம்பா...

இது போல‌ ப‌ல‌ ப‌ட‌ங்க‌ள்...குறிப்பிட்டு ஒருத்த‌ர‌ விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ன‌னும்னு எந்த‌ ஆசையும் கிடையாது...என‌க்கு ரொம்ப‌ பிடித்த‌ க‌லைஞ‌ன் ‌ குடுத்த‌ அல்வா ரொம்ப‌ நாளைக்கு அப்புற‌‌ம் தெரிஞ்சி வ‌ந்த‌ ஒரு ஏமாற்ற‌த்தின் வெளீயீடு தான் இது....


இந்த‌ பிளாக்கில் சுட்ட‌ப் ப‌ட‌ம்னு ஒரு லிஸ்ட் போட‌லாம்னு இருக்கேன்....உங்க உத‌வி தேவை....


இன்னோரு சைடு மியூசிக் கொள்ள‌யர்க‌ள்...அவ‌ங்க‌ வேலை இன்னும் ஈசி...அத‌ப்ப‌த்தி த‌னியா ஒரு ப‌க்க‌ம் போட‌லாம்.....


க‌ருத்துக‌ள‌ தெரிவியுங்க‌...தூய‌ த‌மிழ்ல‌ எழுதாமைக்கு ம‌ன்னிக்க‌வும்....


வணக்கமுங்கணா,


~தமிழ் மாற‌ன்




37 comments:

SurveySan said...

அட, நீங்க எழுதரது, நல்லா இருக்கு மாறன்.
கலக்குங்க

//ஒரு சமயத்துல சினிமா பக்கம் போலாமான்னு நினைத்தது கூட உண்டு...நைணாவும் அவரோட 8ம் நம்பர் பாட்டா செருப்பும் நினைவுக்கு வர ஐடியாவ அப்படியே கைவிடவேண்டியதா போச்சு...
//

அதே அதே! எனக்கும் அப்படித்தான் நடந்தது :)


சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் பரிச்சயம் எனக்கும் இருந்தது. அழகம் பெருமாள், நம்ம தூரத்து-friendu :)

GodFather அலசல் அருமை.

பட்டைய கெளப்புங்க.

துளசி கோபால் said...

நல்ல அலசல்தான். பல வருஷங்களா மனசுக்குள்ளெ நான் கருவிக்கிட்டு இருந்த டாபிக்.

எல்லாம் காப்பி & பேஸ்ட்தான்(-:

கலக்குங்க

மாறன் said...

நன்றி சர்வேசன் அவர்களே, முத‌ல் பின்னூட்ட‌ம் ச‌ர்வேச‌னிட‌மிருந்து வ‌ந்த‌து ஒரு ந‌ல்ல‌ அறிகுறியா தெரியுது.... :)

மாறன் said...

நன்றி துளசி கோபால் அவர்களே, இந்த டாப்பிக்ல நிறய எழுதலாம்னு இருகேன்...

Anonymous said...

சுட்ட படமா..சுடாத படமா..என்று
ஓளவை ஆராய்ச்சி செய்யத்தெரியாத
அப்பாவித் தமிழ் ரசிகர்கள்!hero worship அவர்கள் கண்களை மறைக்கிறது. திரை ஒரு நாள் விலகும்.
சுட்டவர்களையெல்லாம் அடிச்சு துவைத்து காயப்போட்டுவிட்டீர்கள்!
நானானி

Anonymous said...

இதுக்கு எதுக்கு நீங்க ஆங்கில படங்கள் பக்கம் போகணும்? பழைய படங்களைத் தூசி தட்டினால் இப்போ வர்ற நிறைய படங்களின் மூலம் தெரிந்து விடுமே!

(பழைய படங்களின் கதை சுட்ட இடம் எதுவோ?)

உங்கள் ஆராய்ச்சி வாழ்க!

கோகிலா கார்த்திக்

Anonymous said...

Hi,
I could give a list of "copied" movies / scenes in tamil from hollywood
Punnagai Mannan : the Violin dance and the rain dance lifted from the movie "Singing in the rain" (1952)

Minasara kanavu : Every body will like the picturistaion of the song "venilave" but it is a xerox copied from the film "An American in Paris" (1951) (not only the dance but also the set are copied) it is to note that Prabu deva got national award for choreography for that movie

Kadhal Mannan : The scene where heroine tries to commite kill her self by locking in the garage after starting the engine of cars is lifted from movie "Sabrina"(1954)

May maadam : complete Remake (expect the climax) of the all time classic film "Roman holiday" (1953)

Gajini : Rehashed version of the film Memento (2000)

Anniyan : main theme of MPD copied from sidney sheldon's novel "tell me your dreams" and sub plot of using anagrams after each murder is from Dan browns novel "The Da Vinci code"

Jay Jay : xerox copy of "Serendipity (2001)"

Even actor shivaji ganeshan used some scenes
"The Brisk walk" he does in the film Thagapathakam is from film "The bridge on the river kwai" (1957) done by Alec Guinness.
The negative character he does in film uthama puthiran is fsame as the character done by Yul Brynner in the film "King and I (1956)"
The list is exhaustive

Anonymous said...

Why is that you Rajni fans - even though he is the Superstar - still just can not digest the ingenuity of the MIGHTY KAMAL HAASAN(always feel scared of even HIS shadow!) is beyond me!

Look at all your "Thalaivar" padams - once always copied from Amitabh's movies (the list is too long buddy), then copy from Malayalam (the latest is the super hit Chandramuhi!), telugu or even from Kannada (where hardly any movie is original!!).

So, stop throwing stones at marble homes when you are living in glass houses! got it?!!

மாறன் said...

நானானி,

"hero worship அவர்கள் கண்களை மறைக்கிறது."

சரியாச் சொன்னீங்க...காலம் மாறும் வரை காத்திருப்போம்...

நன்றி,
‍மாறன்

மாறன் said...

Mr Anonymous,

உங்க லிஸ்ட் ரொம்ப பிரமாதம்ங்க... நம்ம ஆளுங்க‌ 1950 வரைக்கும் போய் சுடுரத பாத்தா சரக்குக்கு எவ்வளோ தட்டுபாடு இருக்குன்னு தெரியுது...

இவிங்கிலுக்கு அவார்டெல்லந்தர நம்ம மக்கள் வெள்ளந்திகளா..இல்ல முட்டாள்களா?

மாறன் said...

Dear SamPal,

I just comment on the creator not the actor. As an actor I am a big fan of Kamal too...

நெல்லை சிவா said...

சும்மா கலக்கலா அலசியிருக்கீங்க, தமிழ் சினிமா-வ இங்கிலீஷ் பார்முலால பாத்திருக்கீங்க,

ஆனா, 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்' முழக்கமிட்டானே ஒரு கவிஞன், அவன் வாயிலா பார்த்தா, இங்கிலீஷ் படத்த தமிழ்-ல எல்லாரும் பாக்க வச்சிருக்காங்கன்னு ஆறுதல் பண்ணிக்கலாம்.

ஆனா, என்ன இவங்க எல்லாம் சொந்தச் சரக்குன்னு சொல்லுறது தப்பு.

அந்த வகையில, உங்க/நம்ம பேவரிட் டைரக்டரு, 'derailed'-ஒட தாக்கத்த சொல்லிதான் படத்த வெளியிட்டு இருக்காரு.

சூப்பரான அலசல், நிறைய புது டைரக்டர்கள் ஏன் புது வலைப்பதிவர்கள் கூட அசத்தலான ஆரம்பத்தக் கொடுத்து, அப்புறம் ஏமாற்றிருவாங்க. நீங்க, அது மாதிரி செய்யாம தொடர்ந்து கலக்கோணும்-னு கேட்டூக்கறேன்.

மாறன் said...

நெல்லை சிவா,

நன்றி... தொடர்ந்து இருப்பேன் என்றே நம்புகிறேன்...

~மாற‌ன்

Anonymous said...

please convert below in unicodeTamil and publish it.


-nallaa ezhuthuRIkaLE! kalakkungka!!!

-namakku ingkilipiisu theriyum... God father m paakkalaam serindipity m paakkalaam... ingkilipiisu theriyaatha namma thUraththu massikaLlaam ennaa pannuvaayngke? inththaa irukkuRa marutha enththa pakkam irukkunnu theriyaathavangkitta NY la -natakkuRa kathaiya paNNi kaamissaa pinnangkaal ussi kutumila atikkiRamaathiri ootamaattaan?

appitInnu nenassu manasa thEththikungka maaRan!!!

Bala said...

என் பங்குக்கு கொஞசம்

1) பச்சைக்கிளி முத்துச்சரம் - derailed (புஸ்தகத்திலிருந்து உருவினது ஒத்துகிட்டு, கிரெடிட் குடுக்க காசில்லன்னு சொல்ற அளவுக்கு மப்பு கவுதமுக்கு ). போன வாரம் தி ஹிந்து friday review ல நான் ஒண்ணும் இங்கிலீஷ் படத்தில இருந்து சுட மாட்டேன்னு பெருமை பேசறார்

2) காக்க காக்க - கிளைமாக்ஸ் ல வரும் பெட்டியில் தலை சீன் அப்டியே se7en (brad pitt, direction steven soderberg) லெர்ந்து சுட்டது

3)பட்டியல் - Bangkok Dangerous ஓட தமில் ஜெராக்ஸ்

4) கஜினி - memento (christopher nolan) தமில் மசாலா வெர்ஷன். முருகதாஸ் க்கு ஓவர் இது தான். ஏங்க காப்பி தானேன்னு கேட்டா. ஆமா, அந்த இங்கிலீஸ் படம் நல்லா ஓடவே இல்ல அதனால அந்த ஐடியாவா நான் இன்னும் நல்லா பண்ணிருக்கேன்னு சொல்றாரு. cult film status பெற்றுள்ள மெமண்டோவுக்கு இது ரொம்ப தேவை

5) அவ்வை ஷண்முகி - Mrs Doubtfire

6) தெனாலி - what about bob

7) அன்பே சிவம் - planes trains and automobiles. (கம்யூனிசமும் கிரணும் மட்டும் ஒலக நாயகனின் கைவண்ணம். மீதியெல்லாம் steve martin சரக்கு)

8) வெற்றி விழா - bourne identity (robert ludlum book) இந்து புத்தகத்துக்கு பிலிம் ரைட்ஸ் வாங்கி ஹோலிவுட் எடுக்கறதுக்கு மின்னாடியே ஒலக நாயகன் இங்க காட்டிடார்.

9)நாயகன் முதல் பாட்ஷா வரை வரும் "நான் தான் பண்ணேன்" (அதாங்க ஹீரோ அநியாயக் காரன கொல பண்ணிடுவார். போலீஸ் வந்து கூட்டத்த கேக்கும் யார் பண்ணான்னு. ஒடனே crowd எல்லாம் நான் தான்னு சொல்லி புல்லரிக்க வப்பாங்களே - From the movie "Spartacus". this scene is famously referred to as "i am spartacus" scene and is even a managment school anecdote on collective leadership

10) 12B - Sliding Doors. என்ன மக்கா பாதி பேரு இத டபுள் ஆக்ட்ன்னு நினச்சுகிட்டானுங்க

11)கொஞ்சம் பழைய காலம்
சாந்தி நிலையம் - jane eyre

12) அந்த நாள் - roshomon. (but i think this is more of a tribute than plagiarism)

13) ஜூலி கணபதி - stephen king's misery. என்ன கொடுமைனா நம்ம தல கிங் புக்குல ரம்யா கிருஷ்ணன் கனவுல ஐடம் சாங்க்ல ஆடறாங்க

14) ருத்ரா - பஃபூன் வேஷம் போட்டு கொள்ளையடிக்கும் காட்சி சீன் பை சீன் பில் முர்ரெயின் quick change படத்திலேருந்து சுட்டது

15) சூரியன் - point of impact by stephen king. (ஆனா கவுண்டரின் "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா"/ காந்தக் கண்ணி ரைட்ல பூசு" க்காக பவித்ரன மன்னிச்சரலாம்

16)ஒலக நாயகன் டாம் க்ரூஸ்க்கு மிந்தியே தல கீழா தொங்கி வைர மீன் ஒன்னு சுடுவார் குரு படத்தில - scene lifted from one of the pink panther movies

17)நான் சிகப்பு மனிதன் /க்ரோதம் - death wish

18)காதல் கோட்டை - shop around the corner

19) தோஸ்த் :சரத் குமார் ரகுவரன் படம். - double jeapordy

20)யுவா - amerros perros. not blatant copy but ripped enough stuff

இன்னும் சொல்லிகிணே பொலாம்

Anonymous said...

KadhalMannan, Minnale,... - Titanic

மாறன் said...

பாலா,

உங்க லிஸ்ட் மிக அருமை... நம்மாளுங்க‌ எங்க இதயெல்லாம் பாக்க போராங்கன்னு நெனச்சி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்...இதயெல்லாம் தெரிஞ்சிக்க வழி பன்ற த‌மிழ் ஃபிளாகிற்கு ந‌ன்றி...

~மாற‌ன்

அகில் பூங்குன்றன் said...

BIG ங்கற படத்தை தான் சூர்யா நியூ ன்னு எடுத்தார். சீன் பை சீன் காப்பி அண்ட் பேஸ்ட்.

கிரண் மாமிய தவிர

கார்த்திக் பிரபு said...

nalla eludhureengal valthukal ..keep goin frend

சிநேகிதன்.. said...

சூப்பர் தலைவா! என் கண்ண திறந்திட்டிங்க!! இன்னும் நிறைய எழுதுங்கொ.. வாழ்த்த்க்கள்....

பாரதிய நவீன இளவரசன் said...

nice blog... go ahead with more...best wishes!

Anonymous said...

whistle(sharin) - urban legends, a real good thriller.

Anand V said...

அருணாச்சலம் - Brewster's Millions
மைடியர் மார்த்தாண்டன்- Coming to America
ஆத்மா .- The Miracle
வசூல்ராஜா - Patch Adams

காதல் கொண்டேன் - Klassenfahrt
சதி லீலாவதி - She Devil
மகளிர் மட்டும் - Nine to Five
.....

மாறன் said...

கலாபாரதி, Bharateeyamodernprince, கார்த்திக் பிரபு - உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!!

இலவசக்கொத்தனார் said...

நல்லா இருக்கு! போட்டுத் தாக்குங்க! ஆனா வெறும் பட்டியலா குடுக்காம, இந்த பதிவுல சீன் பை சீன் போட்டா மாதிரி போடுங்க!

Anonymous said...

//..20)யுவா - amerros perros. not blatant copy but ripped enough stuff..//

யுவா (ஆய்த எழுத்து) - கொஞ்சம் Ameros Perros கொஞ்சம் City of Gods.

மாறன் said...

இலவசக்கொத்தனார் அவர்களே,

கண்டிப்பா முயற்சி செய்றேன்.

Anonymous said...

Gajini: memento
the scene where asin guides a blind man through a street is lifted straight from the French movie "amelie".. instead of smelling flowers etc. in gajini they smell drainage :)
The preivous poster who said yuva has been copied from "City of gods" has not seen city of gods. It is completely different. Yuva was lifted only from amoros perros.

Anonymous said...

As the list goes i thnk it easy to make list of original movies. List one orignal and was superb hit movie.

பெருசு said...

//ஐயோ..இந்த பெருசு ரவுசு தாங்க முடியல மச்சி" //

நீங்க என்னை நினச்சி இந்த கமெண்டு
விடலன்னு நினைக்கிறேன்.

சீனு said...

ஒரு ராம்கி படம் (cow boy வேஷம் போட்டுகிட்டு) - The Meckkenes Gold (க்ளைமேக்ஸ்)
சாந்தி நிலையம் - Sound of Music
அசுரன் - The Predetor

Anonymous said...

I think these are originals:
Muthal mairiyadhai
16 vayathinile
Kadhal
Veyyil
Barathi kannama
..

Raveendran Chinnasamy said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

//....உங்க உத‌வி தேவை....//
என்னால் முடிஞ்சது தொடர்ந்து வாசிச்சி .. பின்னூட்டம் போடுறது... ரெண்டும் செஞ்சிர்ரேன். தொடருங்கள் ........

ஜி said...

God Father பத்தி நீங்க சொன்னது எல்லாமே நானும் Note பண்ணிருக்கேன்... நல்ல அலசல் :)))

மாறன் said...

பெருசு அவர்களே...

சத்திமா இல்லீங்கன்னா...இது நம்ம வீட்டு பெருசுங்கன்னா...

உங்க சர்வேசன் போட்டி புகைப்படத்தை ரொம்பவும் ரசித்தேன்...

மாறன் said...

தருமி அவர்களே,

உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி...