Saturday, April 7, 2007

கான் ஆர்ட்டிஸ்ட்ஸ் – ஏமாற்றுபவனுக்கே உலகம் சொந்தம் ?

"$@%^&*!%^$ நம்பவெச்சி கழுத்த அறுத்துட்டான் மச்சி… " – பாஸ்கர் சொல்லி முடிக்கிறப்ப தான் நான் எண்ட்ரி குடுத்தேன்… யார சொல்ரான்னு செரியா கெஸ் பன்ன முடியல…அவன் யூஸ் பண்ண பேட் வோர்ட்ஸ எல்லாம் பாத்தா என்ன இருக்காதுன்னு ஒரு நம்பிக்கை.. (ஹீஹீ …)

இருந்தாலும் கேக்கறதுக்கு முன்னால கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாத்துகலாம்னு யோசிச்சாக்கா… கடஸியா அவன ஏமாத்துனது….அவன் வண்டிய உசார் பண்ணி இன்னோரு பிரெண்டுக்கு (இண்டர்வியுக்கு டைம் ஆயிடிச்சி மச்சி … நைட்டெல்லம் பிரிப்பேர் பண்ணினேன்…) குடுக்க போயி அந்த நாயி இன்னான்னா பிகர பிக்கப் பண்ணிக்கினு ஊரெல்லாம் சுத்திட்டு வந்து எனக்கே அல்வா குடுத்தது ஞாபகம் வந்தது …

ஓக்கே…அது நடந்து கொஞ்சம் நாலாச்சி, என்னான்னு தான் கேப்போம்னு கேட்டேன் …

"டேய், இன்னாடா ஆச்சி?", நான்

"ஆமாண்டா ஏமாந்தத எத்தினிவாட்டி சொல்றது?", பாஸ்கர்

"சொல்டா டேய்…", மூஞ்ச ரொம்ப சோகமா வெச்சுகினு கேட்டேன்.

"ஒன்னும் இல்ல மச்சி", இது பாஸ்கர் கிட்ட உச்சு கொட்டி கதய ஏற்கனவே புல்லா கறந்துட்ட சரவணன். அவன் ஸ்டயில்ல சொல்ல ஆரம்பிச்சான் …

"இவனும் தொரயும் பைக்ல போயிருக்கானுங்கோ. நம்ம நூரடி ரோட்டு மொனயில எதோ ஒரு பெருசு பாவமா நின்னுகினு கைய காமிச்சு இருக்குது. ஒடனே நம்ம பசங்களும் பாவப்பட்டு நின்னு இன்னான்னு கேட்டுகிறானுங்கோ … பெருசு ஓன்னு கதரி அழுதுகீது… இன்னான்னு விசாரிக்கலாம்னு பாத்தா பெருசுக்கு தமிழ் தெரியாது போல …நம்ம இந்தி பண்டிட் (பண்டிடெல்லாம் ஒன்னும் இல்லீங்க. நம்ம கோஷ்டில கொஞ்சூண்டு இந்தி தெரிஞ்சவன்) தொரதான் டிரான்ஸ்லேட் பன்னி இருக்கான் … "

"பெருசுக்கு சொந்த ஊர் ராஜஸ்தானாம். தரயில போடற கார்பெட் இல்ல? அதெல்ல்லாம் செஞ்சி இங்க எக்ஸிபிஷனுக்கு விக்க வந்து இருக்குது …எக்ஸிபிஷன் தீ புடிச்சி எரிஞ்சி போனதுல சரக்கெல்லாம் அவுட்டாம். ஒரு ட்ரை சைக்கில்ல நாலு கார்ப்பெட் வெச்சிக்கினு இருந்து இருக்குது. கடசியா மிஞ்சினது இதுதான். ஊருக்கு போவ கூட காசு இல்ல இதுல ஒரு கார்ப்பெட் இருவது ஆயிரம் போவும். இதெல்லாம் பெரிய அரண்மனயில போடற குவாலிட்டி. இதுல ஒன்னாவது எடுத்துகினு பாதி காசாவது தந்தா ஊருக்கு போவுறதுக்காவது காசு கெடைக்கும்னு பெருசு ரொம்ப பிலடப் குடுத்து இருக்குது."

"நம்மாளுங்களும் பாவப்பட்டு இருக்கானுங்கோ. அப்பிடியே சூப்ப்ப்புரா பேரம் பேசி (?%#$%) ஒன்னு அஞ்சாயிரமுன்னு ஆளுக்கு ஒன்னு வாங்கிகின்னு வந்து இருக்கானுங்கோ …", மொகத்துல நமுட்டு சிரிப்பு.

"மச்சி… அவுனுக்குதான் இந்தி தெரியும் பாவப்பட்டு வாங்குனான், ஒன்னுமே புரியாத நீ இன்னாத்துக்கு வாங்குன? சைடுல வித்து துட்டு பாக்லான்னுதான? சும்மா இருக்காம பாஸ்கர போட்டு சீண்டுனான்.

"^%#@# ச்சே…உங்கிட்ட சொன்னன் பாரு …", பாஸ்கர் ரொம்ப சூடாயி சரவணன பாத்து பாய, நான் உள்ள பூந்து சமாதானம் பண்ண வேண்டுயதா போச்சு.
அந்த கார்பெட் ஒன்னு ஐனூரு கூட போவாது. பாஸ்கர பாத்து பாவபடுறதா இல்ல கோவ படுறதா?

ஏமாற்றுவது ஒரு கலை. ஏமாறுவது?

பெருசு போன்ற திறமையான ஆளுங்க உலகம் பூரா பல லெவல்ல இருக்காங்க. பல பேருக்கு தொழிலே ஏமாத்தி தின்னுறது தான்.

நம்ம இவுங்க மேல வெக்கிற நம்பிக்கை தான் இவங்களோட முதலீடு. அந்த நம்பிக்கய சம்பாதிக்க நம்ம வீக்னெஸ பக்காவா கண்டுபுடிச்சி நெத்தியடி அடிப்பாங்க.

இப்படி எதோ ஒரு விதத்துல எமாந்தவங்க பல பேர நம்ம எல்லாருக்கும் தெரியும்.

சமீபத்துல நண்பர் ஒருத்தர் நைஜீரியாவுல இருக்குற சிலபேர நம்பி பல ஆயிறம் டாலர்கள இழந்துட்டு நின்னப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடிச்சி. மனைவிய விட்டு பிரிஞ்சி ரொம்ப மனசு உடஞ்சி போயிருந்த அவுருக்கு பெண் உருவத்துல (இன்டெர்னெட் மூலம்) லவ்வுன்ற பேர்ல நல்லா அல்வா குடுத்து இருக்கானுங்கோ …

கொஞ்சம் கொஞ்சமா காசு வாங்கி பதினஞ்சாயிறம் போனப்புறம் தான் நண்பர் நம்மகிட்ட விசயத்த சொன்னாரு. நண்பர் ஒன்னும் லேசான ஆளு இல்ல. பல விஷயங்கள ஆழமா பேச கூடியவர். தன்னொடய கருத்த அடிச்சுபேசக்கூடியவர். பல தடவ அவருடய ஆழமான அறிவ பாத்து ஆச்சரியப்பட்டு இருக்கேன்.

இது போல நல்லா படிச்சி பல‌ வருஷம் அமெரிக்கவுல இருக்குற ஒருத்தர் கூட ஏமாற்றப்போ பாஸ்கரெல்லாம் பிஸ்கோத்துன்னு பட்டுச்சி …

இது போல ஏமாத்துறவங்கள பத்தி அண்ணன் கூகிள் கிட்ட கேட்டப்போ தெரிஞ்ச விசயங்க கீழ...

ஒரு கான் ஆர்டிஸ்ட்டொட‌ பொதுவான‌ குண‌ங்க‌ள்...

1. இளிச்ச‌வாய‌னை அடையாள‌ம் கண்டுக‌ர‌து.
2. இளிச்ச‌வாயன் ந‌ம்பிக்கையை ச‌ம்பாதிப்ப‌து.
3. இளிச்ச‌வாயன் கிட்ட‌ இருந்து எவ்வ‌ள‌வோ உருவ‌ முடியும்னு கணக்கு பன்னுரது.
4. சூப்பரா பில்டப் குடுத்து நம்ம இ.வாகிட்டயிருந்து ப‌ண‌த்த‌ உருவுர‌து.
5. சைல‌ன்ட்டா எஸ்கேப் அவ‌ர‌து.

"வ‌ண‌க்க‌ன்னே... ந‌ம‌க்கு மதுர பக்கம். வ‌ந்த‌ எட‌த்துல‌ வ‌ச்சிருந்த‌ பைய‌ யாரோ காலவாடிட்டாய்ங்க‌. வ‌ண்டி செல‌வுக்கு... ", இப்புடி தெனத்துக்கும் தினுசு தினுசா திரியிரவங்க...

"நரம்பு தளர்ச்சி ஆண்மை கோளாறு...", இப்புடி ப‌த்திரிக்க‌யில‌ விள‌ம்ப‌ர‌ம் குடுத்து அல்வா விக்கிர‌வுங்க...

இஷ்ட‌த்துக்கு உதார் உட்டு ப‌ண‌ம் க‌ற‌க்க‌ற‌ ஜோசிய‌ கார‌ங்க‌...

நாடி ஜோசிய‌ம்ன்ற‌ பேருல ரோட்டுக்கு ரோடு க‌ட‌ வெச்சு ஏமாத்துர‌வ‌ங்க‌...(என்னுடய கணிப்புல இது தான் பெஸ்ட் கான்... ந‌ம்ம‌ வாயில இருந்தே மேட்ட‌ற‌ க‌ற‌ந்து ந‌ம்ம காதுல‌யே பூ சுத்துற‌து...)

போலி சாமியாருங்க...

போலி பைனான்ஸ்காரைங்க‌...

"எங்க‌ நைனா எர‌னூரு கோடிய‌ பேங்க்ல‌ வெச்சுட்டு செத்து பூட்டாரு...அத‌ எடுத்து குடுக்குற‌துக்கு உங்க‌ உத‌வி தேவை. இதுக்கு ச‌ன்மானம் உங்குளுக்கு இருவ‌து கோடி..." ஈமெயில்ல அல்‌வா குடுக்குற‌வ‌னுங்க‌...


இப்ப‌டி ந‌ம்மள‌ ந‌ம்பி பெரிய‌ கூட்ட‌மே பொழ‌ச்சி கிட‌க்கு...உசாரா இருங்க‌ ம‌க்கா...


நீங்க யார்கிட்டயாவது அல்வா வாங்கன‌துன்டா?


~ மாற‌ன்

Monday, February 19, 2007

தமிழ் சினிமாவும் ஒரிஜினாலிட்டியும்

இங்கு சுட்ட படம் மட்டுமே காட்டப்படும்

"இப்ப எல்லாம் என்ன படம் எடுக்குரானுவோ...அந்த காலத்துல..."

"ஐயோ..இந்த பெருசு ரவுசு தாங்க முடியல மச்சி" அப்டின்னு பாஸ்கரிடம் கமென்ட் அடிச்சது நல்லா ஞாபகம் இருக்கு...நேத்து தான் நடந்தது போல கூட இருக்கு...

ரஜினி கமல் உச்சதுல இருந்த காலத்துல தான் எனக்கு சினிமா கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது. அது வரைக்கும் டிவில வர படங்கள்ள "சண்டை பயிற்சி" இருந்தாத்தான் அந்த வாரம் சந்தோசமா இருக்கும். நானும் பாஸ்கரும் எத்தன சண்டன்னு கூட எண்னுவோம். "சண்டை பயிற்சி" இல்ல‌னா மனசு ரொம்ப கஷ்டமா போய்டும்.

எம்ஜிஆர் சிவாஜி, ஏன் பகவதர் வரைக்கும் கூட டீவில பாத்து பாத்து தெரிஞ்சிகிட்டதுதான்...போக போக சினிமா மேல ரொம்ப ஆர்வம் வந்து பல படங்களை பார்க ஆரம்பித்து...ஒரு சமயத்துல சினிமா பக்கம் போலாமான்னு நினைத்தது கூட உண்டு...நைணாவும் அவரோட 8ம் நம்பர் பாட்டா செருப்பும் நினைவுக்கு வர ஐடியாவ அப்படியே கைவிடவேண்டியதா போச்சு...

இப்போ வர்ர படங்கள பாக்கரப்போ நம்ம பெருசு ஏனோ சம்மந்தமே இல்லாம கண்ணு முன்னால வந்து போகுது...ஏதோ புரியுர மாதிரி இருக்கு...ஐயோ மச்சி வயசு ஆயிடிச்சோ?

"இல்லடா உனுக்கு ஞானோதயம் வந்துடுசி", பாஸ்கர்.

அவன கண்டுகாம உக்கார்ந்து நல்லா யோசிச்சா...நம்ம தமிழ் சினிமாகாரங்க நமக்கு என்னமா காதுல பூ சுத்துராங்கன்னு நல்லா புரியுது...

ஒரே கதை தமிழ்ல வந்து, தெலுங்குக்கு போய் திரும்பி தமிழுக்கே வருது, அதயும் நம்ம ஆளு விசில் அடிச்சி பாக்கறான்...

ஞானோதயம் flashback:

மெட்றாஸ் வடபழனில ரூம் எடுத்து தங்கி இருந்தப்போ, எனக்கு நிறய அசிஸ்டென்ட் டைரக்டர்கள் பழக்கம். ரூம்மேட்ல ஒருத்தர் அசிஸ்டென்ட் டைரக்டர் இன்னோருத்தர் அசிஸ்டென்ட் கேமெரா மேன். அவங்க ரெண்டுபேரையும் பாக்க பல அசிஸ்டென்டுக்கள், பல அல்லக்கைகள் வருவாங்க...

அல்லக்கை? ~ எதோ ஒரு சத்தியராஜ் படத்துல இந்த வார்த்தைக்கு விளக்கம் தந்த மாதிரி ஒரு ஞாபகம். உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்.

ஜாலியா போவும்...காசு இல்லாம கஷ்டப்பட்டாலும் ஒரு லட்சியத்தோடத்தான் இருப்பாய்ய்ங்க... (நன்றி: வடிவேலு)

எல்லா அசிஸ்டென்ட்டும் குறைந்தது மூனு கதை வெச்சு இருப்பாங்க...அதுல ஒன்னாவது கண்டிப்பா ஆக்~ஷன் கதையா இருக்கும். ரொம்ப க்குளோசா இருந்தா கூட தன்னுடய கதையை இன்னோரு அசிஸ்டென்ட்டுக்கு சொல்ல மாட்டாங்க (விதிவிலக்குகள் உண்டு)

நான் சினிமாவை சேர்ந்தவன் இல்லங்கறதால எல்லாரும் என்கிட்ட சொல்லி எப்படி இருக்குன்னு கேப்பாங்க...சிலருடய கதை சொல்லும் தெரம வியக்கவைக்கும்...நானும் என் பங்குக்கு இது அங்க வந்து இருக்கே இங்க வந்து இருக்கேனு எடுத்து கொடுப்பேன்...அவங்களுக்கு அது தெரியாம இருக்காது...கண்டுபிடிச்சிட்டியான்னு கண்ண சிமிட்டுவாங்க...ஒருத்தர் எந்த படத்த உல்டா பண்றாறுன்னு சொல்லிட்டே ஆரம்பிப்பாரு...பெரும்பாலும் பல கதைங்கல உல்டா பண்ணியே ஒரு கதை அமையும்...ஆங்கிலப் படங்களின் ஆதிக்கமும் அதிகமா இருக்கும்...

சிலருடய சினிமா அறிவ பாத்தா ரொம்ப ஆச்சரியமா இருக்கும்...ஒரு படத்த பாத்து ரொம்ப புல்லரிச்சி போய் ஆஹா ஓஹோன்னு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் ஃப்ரன்டுகிட்ட பேசிகிட்டுருந்தேன்...அவரு இன்னாடான்னா அந்த படம் எங்கெல்லாமிருந்து copy&paste பன்னப்பட்டதுன்னு அக்குவேரு ஆனிவேரா பிரிச்சிமேஞ்சிடாரு....

"உக்காந்து யோசிப்பாய்ய்ய்ங்களோ?", பாஸ்கர்.

நக்கல் பண்ணாக்கூட அவன் சொல்ரதுல உண்மை இருந்தது...எல்லா அசிஸ்டென்ட்டுகளுக்கும் வேலை நேரம் போக இது தான் யோசனை...வடபழனில இது போல எவ்வளோ பேர் தெரியுமா?

ஏன் இவங்களுக்கு சுயமா சிந்திக்கதத் தெரியாதான்னு நீங்க கேட்டா...உங்களுக்கு இன்னும் அந்த எடத்தோட complexity புரியலன்னு தான்னு நான் சொல்வேன்...

குபேரன்ல இருந்து குப்பன் சுப்பன் வரைக்கும் புழங்கும் எடம்...கோடி கணக்குல பனம், புகழ், மற்றும் எல்லா சுகங்கள்...எல்லார் கண்ணுலயும் கனவு...ஒரு படம் நல்லா ஓடுனா அதே மாதிரி 10 படம் பூஜை போடுவாங்க...அதுல 3 படம் ரிலீஸ் ஆனா பெருசு...எவ்வளோ படங்கள் பெட்டிக்குள்ள முடங்கி கெடக்குதுன்னு யாருக்கும் தெரியாது...

ஒரு டைரக்டர் தன்னோட முதல் படத்துல காசு பாக்கறது ரொம்ப கஷ்டம்...ஒரு வெற்றி தந்தாதான் காசு...இல்லினா இவ்வளோ நாள் பட்ட கஷ்டம் வேஸ்ட்.

எனக்கு இந்த அசிஸ்டென்ட்டுகள பாக்கரப்போ பல முறை பாவமாத்தான் இருக்கும்...ஆனா இன்னிக்கு பெரிய பெரிய டைரக்டர்களா இருக்கும் பலர் இப்படி இருந்தவங்கத்தான்...

மேட்டருக்கு வருவோம்...

இந்த அசிஸ்டென்ட்டுக்கள் அங்க இங்க சுடறது பெரிய விஷயமா தெரியல...ஏன்னா அதுல எத்தன படம் வெளிய வரும்ன்றது பெரிய கேள்விக்குறி.

ஆனா நாம எல்லாரும் சேந்து சூப்பரு டூப்பருன்னு சொல்ற பல ஜாம்பவான்கள்...பல எடங்கள்ளருந்து உருவி நல்லா மசாலா கலந்து கொடுகறத பாத்தா இன்னா சொல்றதுன்னே தெரியல...

The Godfather (1972) The GodfatherII (1974)
Marlon Brando, Al Pacino Al Pacino, Robert De Niro, Robert Duvall

இந்த படத்த நம்ம தமிழ் ஜனங்க கண்டிப்பா பாக்கனும்னு நான் கேட்டுக்கறேன். இந்த படத்துல இருந்து சுட்ட சீன்கள பல படத்துல பாத்து இருக்கேன்...

நம்ம மனிரத்னத்திலிருந்து...செல்வராகவன் வரைக்கும் யாரும் இந்த படத்த விட்டுவெக்கல...

ஏன், நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா படத்துல கூட "அண்ணன்டா, அவர் எல்லாருக்கும் அண்ணன்டா"ன்னு வர்ர அந்த புல்லரிக்கவெக்கிர சீன் கூட இந்த படத்திலிருந்து சுட்டது தான்...

"தலீவர சொல்லி குத்தமில்ல...அவ்ரா கத எழுதுனாரு?", பாஸ்கர்.

ஒரு லிஸ்ட் போடுவோமா?

மனிரத்னம் ~ நாயகன் ~ கொஞ்சம் கதை ~ கொஞ்சம் சீன்ஸ்.. எல்லருக்கும் தெரிஞ்ச விசயம் தான் இது...

லேடஸ்ட்டா புதுபேட்டை படத்துல வர்ர மொத்தமா எல்லா எதிரிகளயும் ஒரே சமயதுல போட்டு தள்ளுறது அங்க சுட்டது தான்...ஒரிஜினல்ல சொந்த அண்ணன ஹீரோ மைக்கல் போட சொல்லுவாரு இதுல நம்ம ஹீரோ தனுசு ஒரு படி மேல போயி சொந்த அப்பாவவையே போட சொல்லுவாரு...

"அடோப்ப்பாவீ...", பாஸ்கர். ரொம்ப‌ இன்வால்வ் ஆயிட்டாம்போல‌....



இது எல்லாத்துகும் மேல, நம்ம மரத்தமிழன் கமலஹாசன், இந்த அருமையான படத்த முழூசா அமுக்கி எடுத்த படம் தான் "தேவர் மகன்"

"நாயகன் படத்துல நடிக்கிறப்போ அடிக்கடி பாத்து பாத்து உறு ஏத்தி இருப்பாரு, அதான்...", பாஸ்கர் நமுட்டு சிரிப்புடன். ரஜினிய விட்டுட்டு கமல் சைடு வந்தவுடன் முகத்துல அவ்வளோ சந்தோசம்...

தேவர் மகன் படத்துல கமல் பக்காவா ப்ளான் பண்ணி கதைய அருமையா நம்ம ஊருக்கு ஏத்தமாதிரி மாத்தி இருப்பாரு...அவரோட திறமைய நான் கொஞ்சம் கூட குறைவா சொல்ல இங்க வரல...

கொஞ்சம் கேளுங்க....

ஹீரோ மைக்கல் மிலிடெரில இருந்து குடும்பத்த பாக்க ட்ரைன்ல வந்து எறங்கறாரு. கூட ஒரு பொன்னு.

ஹீரோ க‌மல் வெளிநாட்ல இருந்து படிப்ப முடிச்சிட்டு ட்ரைன்ல வந்து எறங்கறாரு. கூட ஒரு பொன்னு.

"ட்ரைன்ல வரதெல்லாம் ஒரு காப்பியாடா?", பாஸ்கர், சூரியன் படத்துல வர கவுண்டமனி ஸ்டயில்ல.

ஹீரோக்கு அவ்வளவா உள்ளுர் சமாச்சாரத்து மேல கொஞ்ச‌‌ம் கூட‌ ப‌ற்று இல்ல‌...அவ‌ரோட‌ ல‌ட்சியம் சிட்டியில‌ ரெஸ்டாரென்ட் வெக்க‌ர‌து...(ரென்டு ப‌ட‌த்துல‌யும்)

அப்பா தான் ரொம்ப‌ முக்கிய‌மான‌ ஆளு...

விதிவ‌ச‌த்தால காட்க்ஃபாத‌ர் ப‌டுக்க‌யில‌...அண்ண‌ன‌யும் எதிரிங்க‌ கொலை செஞ்சிடுவாங்க, இன்னோரு அண்ணன் எப்பவும் புல் சரக்குள இருப்பாரு (Godfather)

விதிவ‌ச‌த்தால அப்பா இறந்துவிட...இருக்குற ஒரே அண்ணன் எப்பவும் புல் சரக்குள இருப்பாரு (தேவர் மகன்)

வேற‌‌ வ‌ழி இல்லாம‌ ஹீரோ பொறுப்ப‌ ஏத்துப்பாரு (ரென்டு ப‌ட‌த்துல‌யும்)

அப்பா குழைந்தங்க கூட விளையாடிகிட்டு இருக்குறப்போ சாவாரு (ரென்டு ப‌ட‌த்துல‌யும்)

மத்த‌ப‌டி கிராம‌த்து ச‌மாச்சாரம், கோயில் எல்லாம் ஒரிஜின‌ல்னு நினைக்கிறேன்....

நான் யோசிச்சி பாத்த‌துல‌ ஒரு பட‌த்த‌ உருவாக்க ஒரு அறிவாளிக்கு இது போதும்..

"அதுக்கு மேல‌ காப்பி அடிகிற‌துக்கு கிராமத்து கதைல ஸ்கோப் இல்ல‌ ம‌ச்சீ...", பாஸ்க‌ர் தெம்பா...

இது போல‌ ப‌ல‌ ப‌ட‌ங்க‌ள்...குறிப்பிட்டு ஒருத்த‌ர‌ விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ன‌னும்னு எந்த‌ ஆசையும் கிடையாது...என‌க்கு ரொம்ப‌ பிடித்த‌ க‌லைஞ‌ன் ‌ குடுத்த‌ அல்வா ரொம்ப‌ நாளைக்கு அப்புற‌‌ம் தெரிஞ்சி வ‌ந்த‌ ஒரு ஏமாற்ற‌த்தின் வெளீயீடு தான் இது....


இந்த‌ பிளாக்கில் சுட்ட‌ப் ப‌ட‌ம்னு ஒரு லிஸ்ட் போட‌லாம்னு இருக்கேன்....உங்க உத‌வி தேவை....


இன்னோரு சைடு மியூசிக் கொள்ள‌யர்க‌ள்...அவ‌ங்க‌ வேலை இன்னும் ஈசி...அத‌ப்ப‌த்தி த‌னியா ஒரு ப‌க்க‌ம் போட‌லாம்.....


க‌ருத்துக‌ள‌ தெரிவியுங்க‌...தூய‌ த‌மிழ்ல‌ எழுதாமைக்கு ம‌ன்னிக்க‌வும்....


வணக்கமுங்கணா,


~தமிழ் மாற‌ன்