"இன்னாப்பா இப்பத்தான் அவனுங்கோ எல்லாம் முடிச்சானுவோ, இவன் ஆரம்பிச்சிட்டாம்பா", யாரோ கொசுக்கடி தாங்காம அடிக்க போர கமென்ட்டு இப்பவே காதுல கேக்குது. அதுக்கெல்லாம் மசிஞ்சா எப்போத்தான் நாங்க எல்லாம் வியர்டு (இலக்கியம்?) படைக்கிறதாம்?
சில விஷயங்கள நம்மளாள கண்டிப்பா புரிஞ்சிக்க முடியும். இருந்தாலும் அதுங்க வியர்டுன்றத மறுக்க முடியாது (ஹிஹி...வியர்டுங்களை வியர்டுங்களுக்குத்தான புரியும் ?)
தயிர் சாதத்துல ரசம் கலந்து சாப்புடரது (சர்வேசன்), பிஷ் ப்ரை வெச்சு சாப்புடரது (நெல்லை சிவா), சாம்பார் சாதத்துல பஞ்சாமிர்தம் கலந்து சாப்புடரது (ஹிஹி ஜஸ்ட் கிடிங்) இது போல...
நம்ம வியர்டு லிஸ்ட் கீழே...இது எல்லாமே நாந்தான்னு கிடையாது...பெரும்பாலும் ஃப்ரென்ட்ஸ், சிலது நான் (இமேஜ மெயின்டெய்ன் பன்னுவம்ல...)
"எக்ஸாம்ல பாஸ் ஆவலன்னா என்னா நடக்கும்ன்னு எனுக்கே தெரியாது..." அப்டின்னு சாமியயே மிரட்டுனது...
பஸ்சுல இடம் காலியா இருந்தாக்கூட புட் போடுல தான் நிப்பேன்னு நக்கல் பன்னது... (கண்டக்டர் கிட்ட ஆப்பு வாங்கினது பொது வாழ்க்கயில சகஜங்கறதால அத உட்டுடலாம்.)
ஜூரம் அடிக்கிறப்போ ஐஸ்க்ரீம் சாப்பிட்டது...
உள் பனியனை எப்பவுமே திருப்பி போடுறது...
"பயித்தியக்கார ஆஸ்பத்திரியில இருக்கிற பயித்தியத்துக்கு வைத்தியம் பாக்கர அந்த பயித்தியக்கார வைத்தியருக்கு பயித்தியம் புடிச்சா.....", அப்புடின்னு வர விசு டயலாக்க ஊர்ல இருக்கிற எல்லார்கிட்டயும் பயித்தியம் போல ஒப்பிச்சது...
ஓனான் புடிச்சி அத பீடி புடிக்க வெச்சது ("ஓனான் புடிச்சது தான் நான். ஆன அது வாயில பீடி வெச்சது பாஸ்கர்தாம்ப்பா...", நைனாகிட்ட உதை வாங்கறப்போ சொன்னதயே இங்க ரிப்பீட் செய்யரேன்)
அப்புடின்னு லிஸ்ட் எசகுபிசகாத்தான் போகுது...
ஆனா இதெல்லாம் ஒரு மேட்டரா? நம்ப பள்ளிக்கூட வாத்தியாருங்கோ பேசின இங்கிலீஷ் அன்னிக்கி என்னமோ ரொம்ப வியர்டாத்தான் இருந்திச்சி...இன்னிக்கி நெனெச்சா ஒரே சிரிப்பாத்தான் இருக்கு...
பி.டி. வாத்தியாரு ஒரு தடவ எங்கள பாத்து "Why are you rotating the ground?" ~ அப்பிடின்னது என்னான்னு புரியாம ஙே ன்னு விழிச்சது ஞாபகம் இருக்கு...கொஞ்சம் யோசிச்சா அவர் என்ன சொல்ல வந்தாருங்கறத ஈஸியா புடிச்சிறலாம்...புடிங்க புடிங்க...
சயின்ஸ் வாத்தி, "Open the Window. Let the atmosphere come in", அப்டின்னப்போ சில பசங்க சிரிச்சேப்புட்டாய்ய்ங்க...
சிறு வயசுல ஒரு அங்கிலோ இந்தியன் ஆன்ட்டிகிட்ட டியூஷன் போனோம். ஆன்ட்டி சும்மா இங்கிலீஷும் இல்லாம தமிழும் இல்லாம ஒரு ரேஞ்சில பின்னுவாங்க. சத்திமா இன்னா பேசறாங்கன்னே புரியாது. இன்னாடா நைனா இப்புடி மாட்டிவுட்டுட்டாருன்னு பாஸ்கர் கிட்ட கேட்டா அவன் "ஆமான்டா உன்னோட உட்டாரா? எங்கப்பா கிட்ட சொல்லி என்னியுமில்ல சேத்து உட்டுட்டாரு?", கடுப்புல என்ன பாத்து மொரச்சான்.
மொட்ட மாடியில டியூஷன். ஒரு நாள் அவுங்க வீட்டுக்குள்ள நுழைய போரோம், ஆன்ட்டி மாடில இருந்து எங்கள பாத்து கைய காட்டி கத்துராங்க...
"Deksa fell in the kawa man" , ஒன்னுமே புரில. நால்ஞ்சு தடவ அவங்க கத்துனதுக்கு அப்புறம் அவங்க கைய காமிச்ச எடத்துல பாத்தா, அங்க இருந்த சாக்கடையில அவங்க வீட்டு பாத்திரம் ஒன்னு விழுந்துட்டு இருக்கு. அதத்தான் அப்பிடி சொல்லியிருக்கங்க :)
(புரியாதவங்களுக்கு deksa = பாத்திரம், kawa=சாக்கடை)
ஒரு நாள் விளையடிகிட்டிருந்த பசங்கள பாத்து ஆன்ட்டி "Dei don't play in the veyyillll go and play in the puliyaa maraththu nezil" அப்பின்னு சொன்னதா கேள்வி. புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்...
இதோட ஐ.யேம் எஸ்கேப்...
நம்மள போட்டுகுடுத்த புண்ணியவான் நெல்லை சிவாவுக்கு ஸ்பெஷல் தேங்ஸ்...
~மாறன்
Thursday, April 5, 2007
நானும் மாட்டிக்கிட்டேன்
Subscribe to:
Post Comments (Atom)

9 comments:
//Deksa fell in the kawa man//
இந்த மாதிரி நெறைய நானும் கேட்டிருக்கேன்:)
குறிப்பா, தமிழ் மீடியம் படிச்சுட்டு, பாதீல இங்கிலீஷ் மீடியம் வர பஸங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க.
எங்க நைனா என்ன தொர மாதிரிதான் வளத்தாரு. lkgலேருந்து இங்கிலிபீஷ் தான் :)
ஆறாவது படிக்கும்போது, 2nd language ஹிந்தி/தமிழ்னு பஸங்கள பிரிப்பாங்க. ஹிந்தி மிஸ் வந்து "Children, how many of you know hindi?" அப்படின்னாங்க.
நம்ம ப்ரெண்டு, விஜய்ஆனந்துக்கு ஹிந்தி தெரியாது. அத அழகா எழுந்து "I NO miss" னு கத்தி சொன்னான்.
ஹிந்தி மிஸ்ஸும், அவன லவுட்டுகினு போய் ஹிந்தி சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவன் வாழ்க்கையே அந்த 'NO'வால மாறிடுச்சு.
:)
தயிர் சாதத்துல, ரசம் ஊத்தி சாப்டு பாருங்க, அப்பறம் புரியும் அதன் அருமை :)
ஓநானுக்கு பீடியா? ஹ்ம். நாங்க கல்விட்டு அடிச்சதோட சரி. அதிலயும், சிலது ரெட் கலர்ல அழகா இருக்கும். அப்ப அழக ரசிக்க தெரியல, குறி வச்சு அடிக்கத் தான் தெரிஞ்சது. பாவம் சேத்துட்டோம் :(
சர்வேசன்,
கருத்துக்கு நன்றி...கோவிசிக்காதீங்க, தயிர் சாதம் + ரசம் இஸ் எ குட் காம்பினேஷன்.
ஓனான் அடிக்காத பசங்க இருக்காய்ங்களா என்ன? ஆனா நீங்க சொன்ன மாதிரி பாவம் தான் செஞ்சிட்டோம். நான் அத உணர்ந்து பல நாள் ஆவுது...
~ மாறன்
//உள் பனியனை எப்பவுமே திருப்பிப் போடறது//
வியர்டுதான்யா நீர், ஆமா, அதென்ன உள் பனியன், பனியன்னாலே உள்ள போடுறதுதான...நடுசென்டர் மாதிரி சொல்றீயளோ..
வியர்டோட நகைச்சுவையையும் கலந்துட்டீக..சூப்பருங்க...
நிறைய புது ஹாலிவுட் படமெல்லாம் வந்திருக்கு...அதப் பத்தியெல்லாம் எழுதலாமேய்யா..ஏன் தூங்கிக்கிட்டு இருக்கிறீர்..
நெல்லையாரே, நன்றி...
சில எடங்கள்ள டிசர்ட்ட கூட பனியன்னுதான் சொல்வாய்ங்க. டிசர்ட்ட திருப்பி போட்டுகிட்டு திரியிர அளவுக்கு நான் வியர்டு இல்லீங்கனா...அதான் தெளிவாச் சொல்லிடலாம்னு...
நீங்க சொன்னத பத்தியெல்லாம் கண்டிப்பா எழுதறேன்...
தமிழீஷ் பத்தி படிச்சேன். எங்கள் காலேஜ் முதல்வர் சொன்னது ஞாபகத்தில் வந்தது.அவர் வரும்போது எழுந்து நின்றால்,"sit and study உக்காந்து படி!"என்பார்கள்
//sit and study உக்காந்து படி!"//
இதுல என்ன தப்புன்னு என் மர மண்டைக்கு புரியலயே.
வாங்க நானானி...வருகைக்கு நன்றி...
நீங்க எழுதுனத பாத்தப்புறம் பழய நண்பர் ஒருத்தர் ஞாபகத்துக்கு வரார். அவர நாங்க மேஜர் சுந்தர்ராஜன்னு தான் கூப்பிடுவோம். இங்கிலீஷ்ல சொல்றத உடனே தமிழ்ல சொல்லிடுவாரு, எப்பவுமே :)
"Why are you standing? ஏன்டா நிக்கிற ?"
"Had Lunch? சாப்புட்டியா?"
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...
~ மாறன்
வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டி
முதல் பரிசு நீங்கள் அனுப்பிய ப்ளோக் தான்
வாழ்த்துக்கள் !!
ஆஹா தலிவா ரொம்ப நக்கல் பன்றாப்போலல்ல இருக்கு...
Post a Comment